For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜபக்சே உத்தரவைத் தொடர்ந்து 58 தமிழக மீனவர்கள் விடுதலை

By Mathi
Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே உத்தரவிட்டதைத் தொடர்ந்து நீதிமன்றமும் 58 பேரை விடுதலை செய்துள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் இலங்கையால் 58 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தியது.

Sri Lankan courts order release of 58 TN fishermen

இந்நிலையில் திடீரென இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் ராஜபக்சே நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார்.

மீனவர்களும் அவர்களின் படகுகளும் ஒப்படைக்கப்பட்டன. இந்த மீனவர்கள் அனைவரும் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தமிழகம் திரும்புவர்.

English summary
Sri Lanka court ordered the release of 58 Tamil Nadu fishermen, arrested by naval personnel on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X