For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவின் கைதால் இலங்கைக்கு நன்மையாம்: சொல்கிறார் சிங்கள இயக்கத் தலைவர் குணதாச அமரசேகர!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டிருப்பதால் இலங்கைக்கு நன்மை கிடைத்துவிட்டதாக இலங்கையின் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

இலங்கையில் வடக்குடன் கைகோர்த்து இலங்கைக்குள் பிரிவினை வாதத்தினை ஜெயலலிதா தூண்டி வந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா கைது செய்யப்பட்டுள்ளதால் இலங்கையைப் பொறுத்த வரையில் நன்மையாகவே அமையும்.

மேலும் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் இந்தியாவுடன் இணைந்து வடக்கில் தனியாக செயல்படுவதற்கும் தடையாகிவிட்டது. இதுவும் இலங்கை அரசுக்கு சாதகமே.

பௌத்த சிங்கள கொள்கைகளையும் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ உரிமைகளையும் அழிப்பதற்கு மத்திய கிழக்கின் முஸ்லிம் தீவிரவாத சக்திகள் முயற்சிக்கின்றது. இதற்கும் இலங்கை மக்களும் அரசாங்கமும் இடம்கொடுக்கக் கூடாது.

இவ்வாறு குணதாச அமரசேகர கூறியுள்ளார்.

English summary
Leader of the National Patriotic movement Gunadasa Amarasekara welcomes the verdict against Tamilnadu former Chief Minister Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X