For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவத்தை வடக்கிலிருந்து வாபஸ் பெற வேண்டும் - புதிய முதல்வர் விக்னேஸ்வரன்

Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு மாகாணத்தில் குவி்த்து வைக்கப்பட்டுள்ள ராணுவம்தான் இப்போதைய பெரும் பிரச்சினை, ஒரே பிரச்சினை. எனவே ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக பதவியேற்கவுள்ள விக்னேஸ்வரன் தெரிவி்த்துள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு நடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அபார வெற்றியுடன் அந்தக் கூட்டமைப்பு ஆட்சியமைக்கிறது.

முதல்வராக ஓய்வு பெற்ற இலங்கை உச்சநீதிமன்ற நீதிபத சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில் வி்க்னேஸ்வரன் அளி்த்துள்ள பேட்டியில், மக்கள் எங்கள் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். வைத்துள்ளனர் என்பதையே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.

Withdraw the army from the north, says Vigneswaran

இலங்கையில் பிரிவினையை நாங்கள் விரும்பவில்லை. இதை அரசத் தரப்பும் நம்ப வேண்டும். பெடரல் அதிகாரம் கொண்ட சுயாட்சியைத்தான் தமிழர்கள் விரும்புகிறார்கள்.

வடக்கின் பெரும்பாலான பகுதிகளில் ராணுவம் குவி்க்கப்பட்டுள்ளது. இதுதான் மக்களுக்கு முக்கியப் பிரச்சினையாக உள்ளது. அவர்கள் உடனடியாக பாசறைக்குத் திரும்ப வேண்டும். திரும்பப் பெற வேண்டும்.

இந்த அமோக வெற்றி மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. மக்கள் என் வசம் பெரும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள். மக்கள் சமாதானத்துக்காக வாக்களித்துள்ளார்கள். அவர்கள் தமது எண்ணங்களை வாக்குகளில் பிரதிபலித்துள்ளார்கள் என்றார் அவர்.

English summary
"They must trust us," C.V. Wigneswaran, the chief candidate for the TNA who will be the province's chief minister, told reporters. "We are for an undivided Sri Lanka, where there is a certain amount of self-ruling under the federal constitution," he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X