For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜூலை 16, 2004... 94 மொட்டுக்களை தீ தின்ற நாள்!

Google Oneindia Tamil News

கும்பகோணம்: கும்பகோணம் தீ விபத்து யாராலும் மறக்க முடியாத, இப்போது நினைத்தாலும் நெஞ்சு பதறக் கூடிய சம்பவம்.

கல்விக் கடலில் நீந்த வந்த தளிர்களை தீயின் கோர நாக்குகள் தின்று தீர்த்த நாள் அது. 94 குழந்தைகளின் உயிரைக் குடித்த அந்த தீ விபத்து நடந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 11 பேரை விடுதலை செய்துள்ளது தஞ்சாவூர் முதன்மை அமர்வு நீதிமன்றம்.

2004 Kumbakonam school fire accident

இதோ, பள்ளி பாதுகாப்பு விதிகளை மாற்றியமைக்க பாடமாக இருந்த இந்தச் சம்பவம் குறித்து சோக நினைவுகள்...

  • கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி. ஆடி வெள்ளிக்கிழமை. அன்று காலை 10.30 மணியளவில் கும்பகோணம் காசிநாதன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது.
  • மாடியில் சிறிய கூரை வேயப்பட்ட காற்றோட்டமில்லாத அறையில் அமர வைக்கப் பட்டிருந்த 200 குழந்தைகளில் 94 குழந்தைகள் தீயில் சிக்கினர்.
  • தகவலறிந்து அலறி அடித்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர் பெற்றோர்களும், அப்பகுதி மக்களும். ஆனால் 94 பிஞ்சு மலர்களை தீ என்னும் அரக்கன் ஆட் கொண்டு விட, 18 குழந்தைகள் மட்டுமே காப்பாற்றப்பட்டனர்.
  • இந்தியாவையே உலுக்கியது இந்த கோரச் சம்பவம்.
  • தீ விபத்து நடந்த போது உயர் பதவிகளில் இருந்த ஜனாதிபதி அப்துல் கலாம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, எல்.கே. அத்வானி, முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் நேரில் வந்து ஆறுதல் கூறினர்.
  • கூரைக் கட்டிடம், குறுகலான மாடிப்படி அனைவரையும் தப்ப விடாமல் செய்தது இந்த கோர விபத்துக்கு முக்கியக் காரணம் என்றால்.
  • அதேசமயம், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பித்துச் சென்ற ஆசிரியர்களும் இதற்கு முக்கியக் காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.
  • குழந்தைகளின் நினைவாக கும்பகோணம் பாலக்கரையில் நினைவு தூண் மற்றும் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பூங்காவும் அமைக்கப்பட்டது.
  • வருடந்தோறும் தங்கள் குழந்தைகளின் நினைவு நாளில், அவர்களுக்குப் பிடித்த திண்பண்டங்கள், விளையாட்டு பொருட்களை நினைவு தூண் அருகே படைத்து பலியான குழந்தைகளின் பெற்றோர் வழிபட்டு வருகின்றனர்.
  • குழந்தைகள் பலியான ஜூலை 16-ந் தேதியை மத்திய, மாநில அரசுகள் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கை.
  • பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு அரசு இடம் வழங்கி உள்ளது. அதில் சுவாமி அமிர்தானந்தா மயி அறக்கட்டளை சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.இக்கோரச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பில்லாத பலப் பள்ளிகளை இழுத்து மூடிய தமிழக அரசு, பள்ளி செயல்பட தேவையான கட்டாய விதிகளை அமல் படுத்தியது குறிப்பிடத்தக்கது.
  • இக்கோரச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பில்லாத பலப் பள்ளிகளை இழுத்து மூடிய தமிழக அரசு, பள்ளி செயல்பட தேவையான கட்டாய விதிகளை அமல் படுத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
These are the details of kumbakonam school fire accident happened ten years ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X