For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 நாளுக்கு மது விற்பனை கிடையாது.. டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

|

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக் கடைகளை மூட தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 22ம் தேதி மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

3 day shutdown for Tasmac shops

இதையடுத்து தேர்தலின்போது அசம்பாவிதத்தைத் தடுக்கும் வகையில் மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பிரசாரம் முடிவடையும் நாளான 22ம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெறும் 24ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது அரசு.

தனியார் பார்களும் இதே காலகட்டத்தில் மூடப்படவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

ஆனால் குடிகாரர்கள் இப்போதே மது வகைகளை வாங்கி ஸ்டாக் வைக்க ஆரம்பித்து விட்டதால் கடைகளில் வழக்கத்தை விட கூடுதலாகவே கூட்டம் காணப்படுகிறது.

English summary
3 day shutdown has been declared for Tasmac shops due to loksabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X