For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மந்திரச் சொம்பு தருவதாக கூறி.. பூஜை நடத்தி ரூ. 35 லட்சம் மோசடி- 9 பேர் கும்பல் கைது

Google Oneindia Tamil News

தேனி: தேனியில் இரவு நேரத்தில் மந்திர சொம்பு இருப்பதாக கூறி, போலியான பூஜை நடத்தி ரூபாய் 35 லட்சம் கபளீகரம் செய்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பாண்டியன்.

இவரிடம், பங்களாமேடு மற்றும் பெரிய குளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் தங்களிடம் மந்திர சொம்பு மற்றும் பஞ்சாரக்கூடை இருப்பதாக கூறி யுள்ளனர்.

ஆசை வார்த்தை கூறி மோசடி:

அந்த சொம்பு மற்றும் கூடையை வைத்து பூஜை செய்தால் அவற்றில் இருந்து கோடிக்கணக்கில் பணம் எடுக்கலாம் என்று கூறி ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

ஏமாந்தவர்கள் பலர்:

இதனை நம்பிய தங்கப் பாண்டியன் மற்றும் பங்களா மேடு, மதுரை பகுதிகளை சேர்ந்த பலர் பல தவணைகளாக ரூபாய் 35 லட்சம் வரை பணம் கொடுத்து உள்ளனர்.

மந்திர பூஜை:

பணத்தை பெற்றுக் கொண்ட அந்த கும்பல் பூஜை செய்து ரூபாய் 1 கோடி பணத்தை கொடுப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து இந்த கும்பல் தங்களின் மந்திர பூஜையை தொடங்கி உள்ளனர்.

பூஜை மட்டும்தான் நடந்துச்சு:

தங்கப் பாண்டியன் வீட்டில் வைத்து இரவில் பூஜை செய்து உள்ளனர். அதேபோன்று பணம் அளித்த நபர்களின் வீடுகளில் சென்று இரவு நேர பூஜையை நடத்தி உள்ளனர். பூஜை செய்து கொண்டே இருந்தார்களே தவிர, கொடுத்த பணத்தையோ, தருவதாக சொன்ன இரட்டிப்பு பணத்தையோ கொடுக்க வில்லை.

போலீசில் புகார்:

இதனால் ஏமாற்றம் அடைந்த தங்கப்பாண்டி யன் இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷி டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் அளித்தார். இந்த நூதன மோசடி குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பத்மாவதி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த 9 பேர்:

விசாரணையில், தேனி பகுதியை சேர்ந்த அங்குலட்சுமி , வசந்தா , பவள்ளியம்மாள் , மாயாண்டி , அவருடைய மனைவி லட்சுமி , ஜேம்ஸ் என்ற ஜெயக் குமார் , கணேசன், மகாலட்சுமி , வெங்கட்ராமன் ஆகிய 9 பேரும் சேர்ந்து நூதன முறையில் இரட்டிப்பு பணம் கொடுப்பதாக கூறி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

போலீசார் கைது:

அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Police arrested 9 members who are all cheated 35 lakhs from the people form Theni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X