For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென் சென்னையில் சம பலத்தில் மல்லுக்கட்டும் அதிமுக - திமுக: நக்கீரன் சர்வே

|

சென்னை: தென் சென்னை தொகுதியில் திமுகவும், அதிமுகவும் சம பலத்தில் இருப்பதாகவும், இங்கு பாஜக வேட்பாளர் இல.கணேசன் தோல்வி முகத்தில் இருப்பதாகவும் நக்கீரன் சர்வே தெரிவித்துள்ளது.

நக்கீரன் சர்வேயில் தென் சென்னையில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மக்களிடையே சரிசமமான ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பாஜக வேட்பாளரான இல.கணேசன் சற்றே பின் தங்கி 3வது இடத்தில் இருக்கிறார். இவர் சற்று விறுவிறுப்படைந்தால் திமுக, அதிமுகவுக்கு பாஜக நல்ல போட்டியைக் கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் சென்னை நிலவரம்...

மீனவ நண்பன் - அதிமுக

மீனவ நண்பன் - அதிமுக

தென்சென்னையில் 15-க்கும் மேற்பட்ட மீனவ குப்பங்கள் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்காக இரட்டை இலைக்கே வாக்களித்துப் பழக்கப்பட்டு விட்ட மீனவ பெண்கள், எப்பவுமே நாங்க ரெட்டை இலைதாங்க. எம்.ஜி.ஆருக்காக இந்த நன்றிக் கடன்' என்று சொல்லிக் கொண்டே சர்வே படிவத்தில் வாக்களித்தனர்.

ஆனா டாஸ்மாக் வேண்டாமே

ஆனா டாஸ்மாக் வேண்டாமே

இருப்பினும் மீனவ குப்பங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டுமென்பது இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

கடும் கோபத்தில் கந்தன்சாவடி, துரைப்பாக்கம், பெருங்குடி

கடும் கோபத்தில் கந்தன்சாவடி, துரைப்பாக்கம், பெருங்குடி

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய துரைப்பாக்கம், பெருங்குடி, கந்தன்சாவடி ஏரியாவாசிகள், சென்னையின் மொத்த கழிவுகளையும் இங்குள்ள குப்பைக் கிடங்கில் மாநகராட்சி கொட்டுகிறது. இதற்கொரு தீர்வே கிடைக்கலை. எந்த அரசியல்வாதியும் கண்டுக்க மாட்டேங்குறாங்க. எங்க கோபம் தேர்தல்ல எதிரொலிக்கும்' என ஆவேசப்பட்டார்கள்.

காங்கிரஸைத் துரத்தனும்

காங்கிரஸைத் துரத்தனும்

விருகம்பாக்கம் தனியார் நிறுவன அப்பார்ட் மெண்ட்வாசிகளிடம் சர்வேக்காக அணுகியபோது, இந்த முறை யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாதுன்னுதான் யோசிக்கிறோம். காங்கிரசை துரத்த வேண்டும்ங்கிறது எங்க எண்ணம் என்றனர்.

பாஜக வர வேண்டும்- ஆட்டோ டிரைவர்கள்

பாஜக வர வேண்டும்- ஆட்டோ டிரைவர்கள்

தொகுதி முழுக்க பல இடங்களில் சந்தித்த ஆட்டோ-ரிக்ஷா தொழிலாளிகள், மாசத்துக்கு ரெண்டு தரம் பெட்ரோல் விலை ஏறிடுது. ஆனா, அதுக்கேற்ப மக்களிடம் கட்டணம் வசூலிக்க முடியறதில்லே. இதுக்கு காரணம் காங்கிரஸ் ஆட்சிதான். இந்த முறை பா.ஜ.க.தான் சார் ஆட்சிக்கு வரணும்'' என்றனர்.

திமுகவை ஆதரிக்கத் துடிக்கும் கம்யூனிஸ்டுகள்

திமுகவை ஆதரிக்கத் துடிக்கும் கம்யூனிஸ்டுகள்

அதேசமயம், கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களில் இருக்கும் தொழிலாளர்களிடமோ, அரசியல் சார்ந்தே முடிவெடுக்க வேண்டியதிருக்கு. எங்களை அவமானப்படுத்திய அ.தி. மு.க.வை பழிவாங்க தி.மு.க.வை ஆதரிப்போம்' என்கிற அரசியல் எதிரொலித்தது.

கூவக் கரையோரம் அதிமுகவுக்கு ஆபத்து

கூவக் கரையோரம் அதிமுகவுக்கு ஆபத்து

கூவம் கரையோரத்து மக்கள் குடி யேறியிருக்கும் கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதிவாசிகளின் கோபம் ஆட்சியாளர்கள் மீது ஏகத்துக்கும் வீசுகிறது. சிட்டிக்குள்ளே இருந்த எங்களை தூக்கி இங்கே போட்டுட்டாங்க. சமூக விரோதிகளின் கூடாரமா போய்டுச்சு. போலீஸ் மாமூலும் கட்டப்பஞ்சாயத்தும் இங்கே அதிகம். கவர்மெண்ட் எதுவும் எங்களுக்காக செய்யலைங்க என்று ஆதங்கப்பட்டனர்.

அதிமுக- பாஜக மீது முஸ்லீம்கள் அதிருப்தி

அதிமுக- பாஜக மீது முஸ்லீம்கள் அதிருப்தி

தொகுதியிலுள்ள முஸ்லிம்களை அணுகியபோது, பா.ஜ.க. மீதான கோபத்தையும் அ.தி.மு.க. மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்தியவர்கள், இந்த முறை அதிமுக-பா.ஜ.க. ரெண்டையுமே ஒரே தட்டில் வைத்துதான் பார்க்க வேண்டியதிருக்கு என்றனர்.

இல.கணேசனுக்கு இளைஞர்கள் ஆதரவு

இல.கணேசனுக்கு இளைஞர்கள் ஆதரவு

தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒரு மாறுதலை ஏற்படுத்தியிருக்கு என்றே சொல்லலாம். படித்து வேலையிலுள்ள இளைஞர்கள், இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. இந்தத் தேர்தலில் வேட்பாளரை பற்றி அறிந்து வாக்களிக்க முடிவு செய்திருக்கிறேன். திமுக, அதிமுக வேட்பாளர்கள் யாரென்றே தெரியவில்லை. பா.ஜ.க. இல.கணேசனை பற்றி நல்லவிதமான தகவல்களையே நாங்கள் அறிந்துள்ளோம் என்கின்றனர்.

மிடில் கிளாஸ் மக்களிடம் அம்மா ஆதரவு

மிடில் கிளாஸ் மக்களிடம் அம்மா ஆதரவு

அம்மா உணவகமும் விலையில்லா மிக்ஸி -கிரைண்டரும் ஏழை மற்றும் லோயர் மிடில் கிளாஸ் மக்களிடம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான மனநிலையை எதிரொலிக்கவே செய்தது.

அரசு ஊழியர்களிடம் திமுக ஆதரவு

அரசு ஊழியர்களிடம் திமுக ஆதரவு

தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சர்வே எடுத்தபோது, பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்தல், ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்பட 8 முக்கிய கோரிக்கைகள் எங்களிடம் இருக்கிறது. இதையெல்லாம் சரி செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அதுபற்றி அக்கறை காட்டவில்லை. இதுகுறித்து பலமுறை நினைவுபடுத்தியும் எங்களை அலட்சியப்படுத்துகிறது இந்த அரசு. விரக்தியும், வெறுமையும் எங்களிடம் இருக்கிறது. இது அ.தி.மு.க.வுக்கு எதிராகவும் தி.மு.க.வுக்கு சாதகமாகவும் எதிரொலிக்கும் என்றனர்.

சம பலத்தில் திமுக - அதிமுக

சம பலத்தில் திமுக - அதிமுக

பொதுவாக இத்தொகுதியில் திமுக அதிமுகவுக்கு ஆதரவாக தலா 178 பேர் கருத்து சொல்லியுள்ளனர்.

3வது இடத்தில் பாஜக

3வது இடத்தில் பாஜக

பாஜக வேட்பாளர் இல. கணேசனுக்கு ஆதரவாக 151 பேர் கருத்துச் சொல்லியுள்ளனர்.

4வது இடத்தில் காங்கிரஸ்

4வது இடத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி டெபாசிட்டை இழக்கும் அளவுக்கு மிகவும் பின் தங்கிப் போய் 42 பேரின் ஆதரவுடன் 4வது இடத்தில் இருக்கிறது.

ஆம் ஆத்மிக்கு 5வது இடம்

ஆம் ஆத்மிக்கு 5வது இடம்

5வது இடத்தில் ஆம் ஆத்மி வருகிறது. 25 பேர் இதை ஆதரித்துள்ளனர். நோட்டாவுக்கு ஆதரவு தெரிவித்தோர் 22 பேர்.

English summary
Both ADMK and DMK are in big fight in South Chennai, says Nakkeeran survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X