For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதிர்க்கட்சியினரின் உணர்வுகளை அமைச்சர்கள் காயப்படுத்துகின்றனர்: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதத்தில் அமைச்சர்கள் பேசுகிறார்கள் என தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''மக்கள் பிரச்னை பற்றி சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச விடுவதில்லை. மேலும், அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதத்தில் பேசுகின்றனர். தி.மு.க. உறுப்பினர்கள் பதில் சொன்னால், அவை ஏதோச்சதிகாரமாக உடனடியாக அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.

ADMK minister hurt opposition MLAs feelings says Karunannidhi

எனவே, ஆளும் கட்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் ஜூலை 31ஆம் தேதி சென்னையிலும், ஆகஸ்ட் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் மற்ற இடங்களில் தி.மு.க. சார்பில் .கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டு பேசவிருக்கிறேன். இந்த கூட்டங்களில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுகிறேன்'' என்றார்.

English summary
DMK chief karunanidhi said, ADMK ministers hurt opposition MLAs feelings. Decrying the personal attack on its party chief M Karunanidhi by AIADMK ministers and 'denial' of adequate opportunities in the Tamil Nadu Assembly, DMK yesterday announced holding protest meetings from July 31 to August 2
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X