For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா உணவகத்தை அடுத்து வருகிறது 'அம்மா தியேட்டர்ஸ்', அம்மா வாரச்சந்தை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: அம்மா உணவகம், அம்மா குடிநீரை அடுத்து ஏழை மக்கள் குறைந்த விலையில் படம் பார்க்க அம்மா திரையரங்கம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் நிதிக்குழு தலைவர் சந்தானம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மேயர் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு,

அம்மா தியேட்டர்ஸ்

அம்மா தியேட்டர்ஸ்

அம்மா திரையரங்கம், அம்மா வாரச்சந்தை, அம்மா தங்கும் விடுதி, அம்மா உண்டு, உறைவிட பள்ளி, அம்மா கட்டணம் இல்லா கல்வி பயிற்சி கூடம் உள்ளிட்டவை கட்டப்படும் என்று மேயர் அறிவித்தார்.

சிறு பட்ஜெட்

சிறு பட்ஜெட்

அம்மா திரையரங்குகளில் சிறு பட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமாம். அந்த திரையரங்குகளில் மக்களுக்கு மலிவு விலையில் டிக்கெட் வழங்கப்படுமாம்.

சாலைகள்

சாலைகள்

சென்னை நகர சாலைகளுக்கு இந்தியர் அல்லாதவர்களின் பெயர்களை வைக்கப்பட்டுள்ளன. அத்தகைய சாலைகளின் பெயர்களை மாற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அம்மா உணவகம்

அம்மா உணவகம்

முன்னதாக ரூ.1க்கு 1 இட்லி வழங்கப்படும் அம்மா உணவகங்கள் தமிழகத்தில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. தமிழகத்தில் சுமார் 200 அம்மா உணவகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா குடிநீர்

அம்மா குடிநீர்

குடி தண்ணீரை பாட்டில்களில் அடைத்து அரசே விற்பனை செய்கிறது. அதற்கு அம்மா குடிநீர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தண்ணீரை இலவசமாக வழங்க வேண்டிய அரசே அதை இப்படி விற்பனை செய்கிறதே என்ற விமர்சனங்கள் எழுந்தன.

English summary
After the introduction of Amma mess in TN, the state government is launching Amma theatres for the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X