For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அம்மா'வுக்காக அனைத்து தியேட்டர்களும் இன்று மூடல்- மதுரையில் உணவகங்களும்..

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பை கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

All 4 shows in TN theaters will be suspended today

இந்நிலையில் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நாளை நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் இன்று உண்ணாவிரம் இருக்கிறார்கள்.

இதற்கிடையே ஜெயலலிதா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மதுரையில் உள்ள அனைத்து உணவகங்களும் இன்று மூடப்படும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
All 4 shows in the TN theatres will be suspended tomorrow in support of Jayalalithaa. Tamil Nadu Film Exhibitors association members will fast for Amma.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X