For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாவம். வீர தீர பாண்டியனுக்கே இடமில்லாமல் போய் விட்டது.. அன்பழகன் தாக்கு

|

கரூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா 40 தொகுதியிலும் வெற்றி பெற்று இந்திய பிரதமராக வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் வீர தீர பாண்டியன் பேசி வந்தார். இன்று அவருக்கே இடமில்லை. ஜெ அம்மையார் நிர்வாக திறமை உள்ளவர், வாழும் திறமை படைத்தவர் என கூறிய பாண்டியன், இடது சாரிகள் 8 இடம் கேட்டார்கள் இப்போது எட்டாத இடமாக உள்ளனர். தற்போது இந்த ரயில் டெல்லிக்கு போகாது என இடது சாரிகள் பேசி வருகின்றனர் என்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் பேசியுள்ளார்.

கரூர் நாடாளுமன்ற தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தி.மு.க வேட்பாளர் ம.சின்னசாமியை ஆதரித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் க.அன்பழகன் கரூர் உழவர் சந்தை எதிர்புறம் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

தனது பேச்சின்போது திமுக அரசு பதவியில் இருந்தபோது செய்த சாதனைகளை அவர் பட்டியலிட்டுப் பேசினார். அவரது பேச்சு...

திமுக ஆட்சியில்தான் முசிறி பாலம்

திமுக ஆட்சியில்தான் முசிறி பாலம்

திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தான் குளித்தலை டூ முசிறி பாலம் கட்டப்பட்டது. மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தின் சாலைகளை தரமான சாலைகளாக மாற்றி போட்டது தி.மு.க அரசு தான்.

சாலைப் போக்குவரத்தும், கப்பல் போக்குவரத்தும்

சாலைப் போக்குவரத்தும், கப்பல் போக்குவரத்தும்

சாலை போக்குவரத்தும், கப்பல் போக்குவரத்தும் தி.மு.க ஆட்சியில் தான் சிறப்பாக நடந்தது. தற்போதைய ஆட்சி ஸ்டாலின் கூறியது போல் வெறும் காட்சியாகவே உள்ளது.

நல்ல வேளையாக இப்போது தேர்தல் வந்ததே

நல்ல வேளையாக இப்போது தேர்தல் வந்ததே

இப்போது வரும் தேர்தல் நல்ல வேளையாக தற்போது வந்துள்ளது. ஏனெனில் மத்திய அரசு மற்றும் பாராளுமன்றம் இயங்க முடியாமல் தவிக்கிறது. தமிழகத்தில் சட்டமன்றம் முறையாக நடைபெறவில்லை. சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறுகிறது. தமிழர்கள் இந்த ஆட்சியை விடுவிக்க இந்த தேர்தல் நடைபெறுகிறது.

வீர தீர பாண்டியன்

வீர தீர பாண்டியன்

தமிழக முதல்வர் ஜெயலலிதா 40 தொகுதியிலும் வெற்றி பெற்று இந்திய பிரதமராக வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் வீர தீர பாண்டியன் பேசி வந்தார். இன்று அவருக்கே இடமில்லை. ஜெ அம்மையார் நிர்வாக திறமை உள்ளவர், வாழும் திறமை படைத்தவர் என கூறிய பாண்டியன், இடது சாரிகள் 8 இடம் கேட்டார்கள் இப்போது எட்டாத இடமாக உள்ளனர். தற்போது இந்த ரயில் டெல்லிக்கு போகாது என இடது சாரிகள் பேசி வருகின்றனர்.

ஏழைகளுக்காக ஆட்சி நடத்திய திமுக

ஏழைகளுக்காக ஆட்சி நடத்திய திமுக

இந்தியாவிலேயே ஏழைகளுக்காக ஆட்சி நடத்திய பெருமை தி.மு.க வை சாரும். முதன் முதலில் ஏழைகளுக்காக குடிநீர் வடிகால் வாரியம் அமைத்து திட்டம் தீட்டியது.

சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பை

சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பை

தி.மு.க ஆட்சியில் தான். மு.க ஸ்டாலின் மேயராக இருந்த போது சென்னையில் உள்ளாட்சி துறை சிறப்பாக நடைபெற்றது. சென்னை மாநகராட்சி தற்போது குப்பை குளங்களாக உள்ளது. சென்னையில் 9 மேம்பாலங்களை கட்டியது ஸ்டாலின் தான்.

உலக மகா பிராடு ஜெயலலிதா

உலக மகா பிராடு ஜெயலலிதா

இந்தியாவின் மிகப்பெரிய பிராடும், சர்வதேச அளவில் மிகப்பெரிய பிராடும் ஜெயலலலிதான் என்றார்.

நீலகிரி ராஜா

நீலகிரி ராஜா

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா 2 ஜி ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை குறைத்து வழங்கியதால் சமுதாயத்தில் செல்போன் கட்டணங்களை குறைத்தார். அதற்கு மன்மோகன் சிங் ஒப்புதலோடு வழங்கினார். மன்மோகன் சிங் ஒப்புதலோடு வழங்கிய இத்திட்டத்தில் 1 லட்சத்து 67 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக ஒரு மாயயை ஏற்படுத்தினார்கள்.

கணக்குல நான் 100க்கு 100

கணக்குல நான் 100க்கு 100

நான் 10 ம் வகுப்பு படிக்கும் போது கணிதத்தில் 100க்கு 100 என வாங்கினேன், ஆனால் எனக்கே அதற்கு எவ்வளவு சைபர் என்று எனக்கு தெரியாது.

செத்துப் போன ஜெயலலிதா ஆடு மாடு

செத்துப் போன ஜெயலலிதா ஆடு மாடு

ஜெயலலிதா அம்மையார் வழங்கிய ஆடு மாடு சாவுகளுக்கு ஜெயலலிதாதான் காரணம் என கூற முடியாமா?. மத்திய அமைச்சர் ராஜா என் மீது உள்ள வழக்கை சட்டப்படி சந்தித்து விடுவிப்பேன் என்றார். ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமண செலவிற்காக ரூ 100 கோடி செலவு செய்தார். தற்போது அவன் எனது மகனே இல்லை என்று மறைக்கிறார்.

டான்சி நில மோசடி

டான்சி நில மோசடி

டான்சி நிலம் வாங்கிய போது அதன் மதிப்பு ரூ 5 கோடி ஆகும் அதை 1.25 கோடிக்கு வாங்கி சட்டத்தை ஏமாற்றினார். ஆனால் முதல்வர் ஜெயலலிதா தி.மு.க வை அளிப்பதும், கலைஞரையும், ஸ்டாலினையும் பழிவாங்குவது தான் எனது வேலை என்கிறார்.

எத்தனை வழக்குகள்

எத்தனை வழக்குகள்

வருமான வரி கட்டாமல் ஏமாற்றியதற்கு ஒரு வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு என என்னற்ற வழக்குகள். தமிழகத்தில் 7 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த சொத்து குவிப்பு வழக்கு முறையாக தமிழகத்தில் நடக்காது என உச்ச நீதி மன்றம் கர்நாடகாவிற்கு மாற்றியது. தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் இந்த வழக்கு தேர்தலுக்கு பிறகு நடத்த வேண்டும் என 28 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குவித்து வைத்த சொத்துக்கள்

குவித்து வைத்த சொத்துக்கள்

அரசு வழக்கறிஞர் பவானி சிங் எவ்வளவு சொத்து மதிப்பு என கணக்கிட்டதற்கு 64 கோடி ரூபாய்க்கு பட்டு புடவை, 8500 பட்டு புடவைகள், 12 ஆயிரம் சாதாரண புடவைகள். இதன் மதிப்பு 88 லட்சம், பின்பு ஜெயலலிதா, சசிகலா வீடுகள் நெ 31 ஏ போயஸ் கார்டன், நெ 36 ஏ போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, ஹைதராபாத் திராட்சை தோட்டம், கெட்டிவாக்கம், அரும்பாக்கம், அண்ணா நகர், வெட்டிவாங்கேணி உள்ளிட்ட பல இடங்களில் பங்களாக்கள் உள்ளன. மேலும் தங்கம், வெள்ளி மற்றும் குத்து விளக்குகள், டைனிங் டேபிள், பீரோ, டி.வி., வி.சி.டி உள்ளிட்ட உயர் தர சமான்கள் பல கோடி மதிப்பில் உள்ளன என்றார் அன்பழகன்.

English summary
DMK leader Anbalagan listed out earlier DMK govt's achievements in his Karur campaign meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X