For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவில் சர்வீஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு- ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்...

Google Oneindia Tamil News

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு தகுதிபெற்றவர்களை தேர்வு செய்யும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வுகள் அறிவிப்புகள் பொதுவாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெளியாவது வழக்கம். தற்போது 2 மாதங்களுக்கு மேல் தாமதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முதல்நிலை தேர்வு ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெறும். www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் இந்த மாதம் 30 ஆம் தேதி இரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்கள் இந்த இணையதளத்திலும்,www.upsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் இருந்தும் பெறலாம்.சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு 2 கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்ட பின்னர் நடைபெறுகின்ற முதல் தேர்வு இது ஆகும்.

வயது வரம்பு கடந்து சென்றவர்களும் இந்த கூடுதல் வாய்ப்பை பயன்படுத்திட முடியும். அதற்கு ஏற்றவகையில் அதிகபட்ச வயது வரம் பில் 2 வயது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்வு எழுத மொத்தம் 4 வாய்ப்புகள் மட்டுமே இருந்த நிலையில் இது 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஓபிசி பட்டியலில் உள்ளவர்கள் 9 முறை முயற்சிக்கலாம். பட்டியல் வகுப்பினர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது. ஆரம்ப கட்ட தேர்வு அப்ஜெக்டிவ் முறையில் நடைபெறும்.

தவறான கேள்விக்கு மதிப்பெண் குறையும். சிவில் சர்வீஸ் முதல் கட்ட தேர்வு ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெறும். தேர்வுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் இ -அட்மிஷன் சர்டிபிகேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
UPSC announced civil service prelim date and application online. There are two more attempts added in this time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X