For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெறுப்பு இருந்தால் வாக்குச் சீட்டில் காட்டுங்கள், அடிக்காதீர்கள்.. வானதி சீனிவாசன்

By Siva
|

சென்னை: ஜனநாயக நாட்டில் வாக்கு கேட்பது எல்லா கட்சிகளின் அடிப்படை உரிமை. அதே நேரத்தில் ஒவ்வொருவரும் தங்களது விருப்பு, வெறுப்புகளை வாக்குச்சீட்டு மூலம் காட்டலாம். அதற்கு பதிலாக வன்முறையின் மூலம் தடுப்பது, வேட்பாளர் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தான போக்கு ஆகும் என்று பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இன்று சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தஞ்சாவூர் பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தம், மல்லிப்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று தடுத்து கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

BJP condemns the attack on party candidate

இதில் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தின்போது மீனவ பெண்களையும் மானபங்கம் செய்து உள்ளனர். அந்த பகுதியில் வாக்கு சேகரிக்க போலீஸ் அனுமதி பெற்றே சென்று இருந்தனர். அப்படி இருந்தும் இந்த மோதலை தடுக்க தவறியது காவல்துறையின் மெத்தனத்தை காட்டுகிறது.

ஜனநாயக நாட்டில் வாக்கு கேட்பது எல்லா கட்சிகளின் அடிப்படை உரிமை. அதே நேரத்தில் ஒவ்வொருவரும் தங்களது விருப்பு, வெறுப்புகளை வாக்குச்சீட்டு மூலம் காட்டலாம். அதற்கு பதிலாக வன்முறையின் மூலம் தடுப்பது, வேட்பாளர் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தான போக்கு ஆகும்.

ஏற்கனவே பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி மற்றும் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் தாக்கப்பட்டபோது போலீஸ் டி.ஜி.பியை சந்தித்து வேட்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புகார் தெரிவித்து இருந்தோம்.

அதன்பிறகும், சேலம், வடசென்னை உள்பட பல இடங்களில் வேட்பாளர்களை வாக்கு கேட்க விடாமல் தடுக்கும் சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இது தவறான போக்கு. ஒத்துழைப்பு என்பது அனைத்து தரப்பிலும் இருக்க வேண்டும். தேர்தல் அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

ஒரு கட்சி, ஒரு கூட்டணி என்று பார்க்காமல் எல்லா இடங்களிலும், எல்லா வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்க தகுந்த ஏற்பாடுகளை காவல்துறை செய்ய வேண்டும்.

தஞ்சாவூர் மல்லிபட்டினத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் ஒரு குழுவினர் தேர்தல் ஆணையத்திலும், போலீஸ் டி.ஜி.பி.யிடமும் புகார் செய்கிறார்கள்.

காவிரி பிரச்சினையில் பா.ஜனதா அரசு தமிழர்களுக்கு துரோகம் விளைவித்ததால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியதாக ஜெயலலிதா கூறி உள்ளார். ஆனால் அதன்பிறகும் பா.ஜனதாவோடு கூட்டணி வைத்திருந்ததை நாடு அறியும்.

நடிகர் ரஜினிகாந்தை மோடி சந்தித்ததும் அதைத் தொடர்ந்து "மோடி ஒரு திறமையான தலைவர் என்று புகழ்ந்து மோடி மனதில் என்னை நினைக்கிறாரோ அதில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என ரஜினி சொன்னதும் நிச்சயமாக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார் வானதி.

English summary
TN BJP leader Vanathi Srinivasan has condemned the attack on party candidate Karuppu Muruganantham.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X