For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவில் ஐக்கியமானார் செஞ்சி ராமச்சந்திரன்!

Google Oneindia Tamil News

Chenji Ramachandran joins ADMK
சென்னை: திமுக, மதிமுக, பின்னர் மீண்டும் திமுக என மாறி மாறி சவாரி செய்து வந்த மூத்த திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான செஞ்சி ராமச்சந்திரன் இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

லேட்டஸ்டாக அதிமுகவில் இணைந்த முக்கியமான மாற்றுக் கட்சித் தலைவர்கள் வரிசையில் செஞ்சியாரும் இன்று இடம் பிடித்தார்.

முன்பு பரிதி இளம்வழுதி, நாஞ்சி்ல் சம்பத், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகிய முக்கியஸ்தர்கள் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் செஞ்சி ராமச்சந்திரன் இன்று அதிமுகவுக்கு வந்து சேர்ந்தார்.

எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய இணை அமைச்சர் என பல பதவிகளை வகித்தவர் செஞ்சி ராமச்சந்திரன். கடைசியாக அவர் திமுகவில் இருந்து வந்தார். மதிமுகவில் இருந்து இவரும் எல்.கணேசனும் விலகி திமுகவுக்கு வந்து சேர்ந்தனர்.

ஆனால் லோக்சபா தேர்தலில் இவர் சீட் கேட்டிருந்தார். கட்சி கொடுக்கவில்லை. இதனால் கோபத்தில் இருந்து வந்த செஞ்சி ராமச்சந்திரன் அதிமுகவில் சேர முடிவெடுத்தார்.

இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் அவருடைய மகன் ஆர். மணிமாறன் ஆகியோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

English summary
Senior DMK leader Chenji Ramachandran joined ADMK today after meeting party chief Jayalalitha with his son Manimaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X