For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்களிக்க ஊழியர்களுக்கு லீவு கொடுக்காத சென்னை சில்க்ஸ்.. சீல் வைப்பு

|

நெல்லை: நெல்லையில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வாக்களிக்க விடுமுறை அளிக்கவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்தை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

இன்று லோக்சபா தேர்தலையொட்டி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களையும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

Chennai silks in Nellai sealed

இந்த நிலையில் நெல்லையில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக் கடையை இன்று மூடவில்லை. விடுமுறை விடப்படவில்லை. மேலும ஊழியர்களையும் வாக்களிக்கப் போகக் கூடாது என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஊழியர்களில் சிலர் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பினர். இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் துணிக்கடையை மூடி சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

English summary
EC officials have sealed the Chennai silks in Nellai for not allowing its staffs to cast their votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X