For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்புச் சகோதரிக்கு வாக்களியுங்கள்... வாக்காளர்களுக்கு போன் செய்து பேசும் முதல்வர் 'அம்மா’

|

சென்னை: இம்முறை லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் தொழில்நுட்பத்தின் பங்கும் இன்றியமையாததாகவே உள்ளது. அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றன.

அந்தவகையில் பிரச்சாரக் கூட்டங்கள் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப் படுவது ஒருபுறம் இருக்க செல்போனில் வாக்குச் சேகரிப்பு விளம்பரங்களும் வரத் தான் செய்கின்றன.

இது நவீன இணையதள யுகம் என்பதால், இணையதள உபயோகிப்பாளர்களைக் கவர்ந்திழுக்க பல்வேறு கட்சிகளும், விதவிதமான சேவைகளை தங்கள் இணையதளத்தில் அறிமுகம் செய்துவருகின்றன.

Chief minister Jayalalitha campaigns through cell phone

அந்தவகையில் இத்தேர்தலில் அதிமுக தொழில்நுட்ப உதவியோடு வித்தியாசமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.

புதிய உறுப்பினர்கள்...

அந்த வகையில் அ.தி.மு.க. ஆன்லைன் மூலம் குறுகிய காலத்திலேயே சுமார் 40 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளது.

வாட்ஸ் அப்....

அதனைத் தொடர்ந்து, இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘வாட்ஸ் அப்' மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள் அடங்கிய வீடியோக்களை பெறும் சேவை அறிமுகப் படுத்தப்பட்டது. சில மாதங்களிலியே 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதில் புதிய உறுப்பினர்களாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் அறிக்கை...

இதற்கிடையே அதிமுக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் அறிக்கை போன்ற செய்திகள் மற்றும் அவை தொடர்பான வீடியோ பதிவுகளைப் பெற 9087778890 என்ற செல்போன் எண் வழங்கப் பட்டது.

அம்மா வாய்ஸ்...

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்ட பேச்சுக்களை நினைத்த போதெல்லாம் கேட்கும் விதமாக, "அம்மா வாய்ஸ்" என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

போனில் பிரச்சார உரை...

9543778899 என்ற செல்ஃபோன் எண்ணிற்கு, தொலைபேசி மற்றும் செல்போன்களில் இருந்து டயல் செய்து ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார உரையை ஒரே நாளில் பல லட்சம் பேர் கேட்டதாக தகவல்கல் தெரிவிக்கின்றன.

காது தேடி வரும் ஜெ....

இந்நிலையில் இவற்றில் இருந்து மாறுபட்டு, தற்போது வேட்பாளர்களை புதுமையான வழியில் சந்திக்கிறார் ஜெயலலிதா. அதாவது முதல்வர் தன்னுடன் பேசுவாரா என ஏங்கிக் கிடக்கும் தொண்டர்களை மகிழ்விக்கும் வகையில் தொலைபேசி வாயிலாக வாக்குச் சேகரிக்கிறார் ஜெயலலிதா.

ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கும் அன்புச் சகோதரி....

ஏதோ வித்தியாசமான எண்ணில் இருந்து அழைப்பு வருகிறதே என போனை ஆன் செய்தால் முதல்வர் பேசுகிறார். அதுவும் ‘உங்கள் அன்புச் சகோதரி பேசுகிறேன்...' என ஆரம்பிக்கிறார் அம்மா.

உங்கள் ஓட்டு...

சில பல சம்பிரதாயப் பேச்சுக்களைத் தொடர்ந்து அப்படியே தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கச் சொல்லிக் கேட்டு விட்டு நன்றி கூறி தனது பேச்சை முடித்துக் கொள்கிறார் அம்மா.

கிள்ளித் தான் பார்க்கணும்....

கணினியில் பதிவு செய்யப்பட்ட வாய்ஸ் தான் என்றாலும் நமது போனில் கேட்கும் போது உண்மையிலேயே ஒரு நிமிடம் முதல்வருடனே பேசுவது போன்ற பிரமை ஏற்படுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.

English summary
The public is really surprised on a voice call, in which the chief minister Jayalalitha campaigns to them in a recorded voice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X