For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. கரத்தை வலுவாக்கி காங். - பாஜகவை நாட்டை விட்டு விரட்ட வேண்டும்: சீமான்

By Mathi
|

தஞ்சை: நாட்டிற்கு நல்லது செய்யாத காங்கிரஸ், பாஜகவை நாட்டை விட்டே விரட்ட வேண்டும், அதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுவாக்கை வேண்டும் என தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தஞ்சை திலகர் திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அதில் அ.தி.மு.க. வேட்பாளர் கு.பரசுராமனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Congress, BJP should be thrown out of the country: Seeman

அப்போது அவர் பேசியதாவது:-

''பெரியார், அம்பேத்கார் பிறந்த மண்ணில் பா.ஜ.க. எந்த தேர்தலிலும் வெற்றி அடைய முடியாது. 1967 - லில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி நம் நாட்டிற்கு என்று எதுவும் செய்யவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டுதான் வருகிறது. குறிப்பாக கல்வி, மருத்துவம் வியாபரமாகி விட்டது. தனியார்மயம், உலகமயமாக்குதல் என்று கூறி, நம் நாட்டில் உள்ள விவசாய நிலங்களை எல்லாம் அயல் நாட்டினருக்கு தாரை வார்த்து கொடுத்து வருகிற செயல் தான் காங்கிரஸ் ஆட்சியில் நடந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு என அனைத்து பொருட்களுக்கும் நாளுக்கு நாள் கொண்டு தான் உள்ளது. இதற்கு முழு காரணம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தான். ஈழத் தமிழர்களின் படுகொலையை முன் நின்று நடத்தியது காங்கிரஸ் கட்சி. இதற்கு துணையாக இருந்தது தி.மு.க. இந்தியாவின் வெளியுறவு கொள்கையை மத்திய அரசு ஆதரிக்கிறது. ஆனால் ஈழத்தில் தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்றால் மத்திய அரசு எதிர்க்கிறது.

இந்தியாவின் வெளியுறவு கொள்கை மாற்றத்தால்தான் நம் தேசத்தின் முழு விடுதலையை நாம் பெற முடியும். அப்போது தான் நம் நாட்டிற்கு என்று நாம் எதையும் செய்து கொள்ளமுடியும்.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. இதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மு.க.ஸ்டாலின்.

இந்த திட்டம் நிறைவேறினால் டெல்டா மாவட்டம் பாலைவனமாகி விடும் என்று கருதி, உச்சநீதிமன்றம் வரை சென்று தடுத்து நிறுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில், காவிரி, முல்லை பெரியாறு, கச்சத்தீவு, மீனவர்கள், மீத்தேன் எரிவாயு, ஈழ தமிழர் படுகொலை உள்ளிட்ட எந்த பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு காணப்படும் என்று குறிப்பிடப்படவில்லை.

பா.ஜ.க.வையும், காங்கிரசையும் இந்த நாட்டை விட்டு விரட்ட வேண்டும். இந்த 2 கட்சிகளின் நிலைபாடு ஒன்று தான். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டவர் ஜெயலலிதா. விவசாயிகளின் நலனில் அவர் அக்கரை கொண்டவர். எனவே, அவரின் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
The Naam Thamizhar katchi cheif Seeman while campaigning at Tanjavore in favour of ADMK candidate has said that the Congress and BJP has to be thrown out of the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X