For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடிய விடிய லிங்குசாமி அலுவலகத்தில் ஐடி ரெய்டு

Google Oneindia Tamil News

Delhi IT officials raid Lingusamy's office overnight
சென்னை: தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து வரும் இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் நேற்று தொடங்கிய சோதனை, இரவெல்லாம் நீடித்தது.

தொடர்ந்து வெற்றிப் படங்கள், வசூலில் சாதனை படைக்கும் படங்கள் வெளியாகும்போது அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களை வருமான வரித்துறையினர் குறி வைத்து ரெய்டு நடத்துவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது லிங்குசாமி, வருமான வரித்துறையினரின் ஸ்கேனரில் சிக்கியுள்ளார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறது லிங்குசாமியின் தயாரிப்புகள். இந்த பின்னணியில் நேற்று அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

லிங்குசாமி அலுவலகம் சென்னை வளசரவாக்கம், ஜானகி நகர், லாமெக் தெருவில் உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு லிங்குசாமியின் அலுவலகத்திற்கு வந்த வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை தொடர்ந்து இரவு முழுவதும் நீடித்து இன்று காலை வரை தொடர்ந்தது. இந்த அதிகாரிகள் அனைவரும் டெல்லியில் இருந்து வந்திருந்தனர். மொத்தம் 12 பேர் ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

English summary
12 IT officials from Delhi continued their raid throughout night in Director Lingusamy's office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X