For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

27 பெண்களை நாசமாக்கிய தர்மபுரி பைனான்சியர் – குண்டர் சட்டம் பாயுமா?

Google Oneindia Tamil News

தர்மபுரி: தர்மபுரியில் வட்டிக்கு பணம் கொடுத்த பெண்களை மிரட்டியும், நிர்ப்பந்தப்படுத்தியும் 27 பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய பைனான்சியர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் ஒரு பைனான்சியர்.

இந்த நிதி நிறுவன அதிபர் பல பெண்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். வட்டியை குறைக்க கடன் வாங்கும் பெண்களை தனது காம வலையில் வீழ்த்தினார்.

பெண்களைப் பந்தாடியவர்:

வட்டிக்கு வாங்கிய பெண்களை பாலக்கோடு அருகே குப்பன் கொட்டாயில் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை வீட்டுக்கு வரவழைத்து தனது காம இச்சையை தீர்த்துக் கொண்டதோடு பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ காட்சிகளாகவும் எடுத்து இருக்கிறார்.

செல்போன் காட்சிகள்:

இந்த ஆபாச வீடியோ காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து வைத்து இருந்தார். இப்படி 27 பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் காட்சியை அவர் பதிவு செய்து வைத்து அந்த காட்சிகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் போட்டு பார்த்து கொண்டார்.

ரிப்பேரான செல்போன்:

ஒரு சமயம் செல்போன் ஹேங்க் ஆன போது அதை செல்போன் கடைக்காரர் ஒருவரிடம் கொடுத்தார். அவர் அந்த செல்போனை ரிப்பேர் செய்த போது அதில் இருந்த ஆபாச காட்சிகளை தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்து அதை மற்றவர்களுக்கு காப்பி எடுத்து கொடுத்து உள்ளார்.

15 லட்சம் கேட்டு மிரட்டல்:

மேலும் நிதி நிறுவன அதிபரிடம் செல்போனில் பதிவான காட்சி குறித்து பேரம் பேசி உள்ளார். ரூபாய் 15 லட்சம் கொடுத்தால் தகவலை வெளியே சொல்ல மாட்டேன் என்று கூறி உள்ளார். அவரை பண்ணை வீட்டுக்கு சிவராஜ் வரவழைத்து தர்ம அடி கொடுத்து இருக்கிறார்.

கைதான சிவராஜ்:

உயிர் பிழைத்தால் போதும் என்று பண்ணை வீட்டில் இருந்து ஓடி வந்த அவர் இது குறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் கூறிவிட்டார். விசாரித்து தகவலை உண்மை என்று தெரிந்து கொண்ட கிராம நிர்வாக அதிகாரி இது குறித்து பாலக்கோடு போலீசில் புகார் செய்ய போலீசார் வழக்கு பதிவு செய்து சிவராஜை கைது செய்தனர்.

பலாத்கார வழக்கு பதிவு:

முதலில் மிரட்டல் வழக்கில் கைது செய்த போலீசார் தற்போது சிவராஜ் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

மத்திய சிறையில் அடைப்பு:

27 பெண்களை செக்ஸ் வலையில் வீழ்த்தி கைதான நிதி நிறுவன அதிபர் சிவராஜ் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

குண்டர் சட்டம் பாயுமா?:

விசாரணைக்குப் பிறகு தான் அவர் எத்தனை பெண்களை சீரழித்தார் என்ற தகவல் வெளியாகும். இந்த நிலையில் சிவராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

English summary
Dharmapuri financier was arrested in the rape case. He misused 27 ladies in the name of financing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X