For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு ஓட்டு கூட விழாது பார்த்துக்கோ.. அதிமுக கவுன்சிலர் போட்ட போடு!

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: எனது வார்டில் ஒரு ஓட்டு கூட விழாது என்று திண்டுக்கல் மேயருக்கு கவுன்சிலர் ஒருவர் வி்ட்ட சவாலால் அதிமுக வட்டாரமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா உதத்ரவுப்படி வாக்கு சேகரிப்பு தொடர்பாக திண்டுக்கல் மேயர் மருதுராஜ் கூட்டியிருந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வராத அந்த கவுன்சிலர், மேயர்அதுகுறித்து விளக்கம் கேட்டபோதுதான் இப்படிப் பேசி அதிர வைத்தாராம்.

DIndigul ADMK councillor slams Mayor

கவுன்சிலரின் இந்தப் பேச்சை உடனடியாக அம்மாவின் கவனத்திற்குக் கொண்டு போய் விட்டனராம். மேலும் தேர்தல் முடியட்டும், கவுன்சிலர் எங்கே போய் விடுவார் எனறு மேயர் தரப்பும் கருவியபடி காத்திருக்கிறதாம்.

வீடு வீடா போங்கப்பா

முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் ஒரு அறிக்கை விட்டார். அதில் அதிமுகவினர் வீடு வீடாகப் போய் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

போடுங்கப்பா மீட்டிங்கை

இதையடுத்து திண்டுக்கல் மேயரான மருதுராஜ் உடனடியாக ஒரு ஹோட்டலில் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். கவுன்சிலர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்திருந்தார்.

மொத்தம் 31 .. ஒன்னு மட்டும் ஆப்சென்ட்

மொத்தம் உள்ள 31 அதிமுக கவுன்சிலர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும வந்து விட்டனர். சேவியர் என்பவர் மட்டும் வரவில்லை.

ஏன் வரவில்லை சேவியர்

இதையடுத்து சேவியரைப் போனில் பிடித்த மருதுராஜ், ஏன் வரலை என்று கேட்டுள்ளார்.

ஒரு ஓட்டு கூட கிடைக்காது...

அதற்கு சேவியர், எனது வார்டில் நீங்கள் பிரசாரம் செய்தபோது, வார்டு செயலாளர் கோரிக்கையால் தான், இந்த பகுதிக்கு ரோடு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்ததாக நீங்கள் பேசினீர்கள். என்னை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனது வார்டில் ஒரு ஓட்டு கூட, அதிமுகவுக்கு விழாது என்று அதிரடியாக கூறி விட்டாராம்.

அம்மா காதுக்குக் கொண்டு போங்கப்பா

இதையடுதது அதிர்ந்து போன மேயர் தரப்பு இந்த விஷயத்தை உடனடியாக தலைமைக்குக் கொண்டு சென்றுள்ளதாம்.

என்னாவார் சேவியர்

வீடு வீடாக போய் வாக்கு சேகரியுங்கள் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்று அதிமுக கவுன்சிலரே கூறியிருப்பது திண்டுக்கல் அதிமுகவினரை அதிர வைத்துள்ளதாம்.

English summary
Dindigul ADMK councillor Xavier has cursed the Mayor for his attituded and slammed him for ignorance towards his ward.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X