For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூம் நம்பர் 105ல் என்ன நடந்தது என்று தெரியாதா விந்தியா?: தேமுதிக 'அட்டாக்'!

|

கரூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்துப் பேசி வரும் நடிகை விந்தியாவுக்கு தேமுதிக பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் தலைமைக் கழக பேச்சாளரும், வழக்கமாக போலீஸ் வேடங்களில் வரும் நடிகருமான ராஜேந்திரநாத் கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஓசூரில் ரூம் நம்பர் 105ல் என்ன நடந்ததஎன்று விந்தியாவுக்குத் தெரியாதா... அப்போது அவரைக் காப்பாற்றியவர் எங்கள் கேப்டன்தானே என்று அதிரடியாக பேசினார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தரகம்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தே.மு.தி.க வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணனை ஆதரித்து திரைப்பட நடிகரும், தே.மு.தி.க தலைமை கழக பேச்சாளாருமான ராஜேந்திர நாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது விந்தியா, திமுக, அதிமுக என அனைவரையும் சகட்டுமேனிகுக வசை பாடினார். ராஜேந்திரநாத் பேச்சிலிருந்து...

புரட்சித் தலைவர் கேப்டன்

புரட்சித் தலைவர் கேப்டன்

புரட்சித்தலைவர் கேப்டன் மூலம் 2001 ரமணா திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறேன். இதற்கெல்லாம் காரணம் கேப்டன் தான். அவருக்கு எனது முதல் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

குறை இருந்தால் மன்னிச்சிக்குங்க...

குறை இருந்தால் மன்னிச்சிக்குங்க...

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லடா புரட்சி தலைவரின் தாரக மந்திரம், எனது பேச்சில் நிறை இருந்தால் எடுத்துக்குங்கா !, குறை இருந்தால் மன்னிச்சிங்க !

தீர்த்ததா.. தீர்த்ததா.. தீர்த்ததா...

தீர்த்ததா.. தீர்த்ததா.. தீர்த்ததா...

இப்போது வர இருக்கும் தேர்தலில் போட்டியிடும் நமது கூட்டணி வெற்றி கூட்டணி. புரட்சி கூட்டணி, வெற்றிக்கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி என்ன செய்தது. முல்லை பெரியாறு அணை பிரச்சினையை தீர்த்ததா ! காவிரி நதி நீர் பிரச்சினையை தீர்த்ததா ! இலங்கை பிரச்சினையை தீர்த்ததா ! இப்படி எந்த பிரச்சினையும் தீர்க்கவில்லை.

ஸ்வீடனில் போபர்ஸ் ஊழல்

ஸ்வீடனில் போபர்ஸ் ஊழல்

1987 ல் ஸ்வீடனில் போபர்ஸ் பீரங்கி ஊழல், 2005 ல் இப்போதைய ஜனாதிபதி அப்போது நிதி அமைச்சராக இருந்தார், நீர்மூழ்கி கப்பல் வாங்கியதில் ஊழல், 2010-ல் காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் ஊழல், என பீரங்கி டிரக் ஊழல், கப்பல் ஊழல், நிலக்கரி ஊழல், காங்கிரஸிம் தி.மு.க வும் சேர்ந்து ஊழல் பண்ணிணார்கள். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என எல்லாவற்றிலும் ஊழல்.

அதிமுகவில் சொத்துக் குவிப்பு

அதிமுகவில் சொத்துக் குவிப்பு

காங்கிரசில் ஊழல், அதே போல தற்போது ஆளுகின்ற அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் அவங்கசொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்குது. நீங்கள் பார்த்து கொண்டிருப்பீர்கள். 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கு. அங்கிருக்கும் அரசாங்க வழக்கறிஞர் பவானி சிங் லிஸ்ட் கொடுக்கிறார். கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடி ரூபாய், 6 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து கணக்கு இருக்கு.

கலர் டிவி கலைஞர்

கலர் டிவி கலைஞர்

அதே போல நமது கலர் டி.வி கலைஞர். பல ஆயிரம் கோடி சொத்து இருக்கு உதாரணத்திற்கு கலைஞரின் கோபாலபுரம் வீடு மதிப்பு ரூ 5 கோடி ரூபாய், அதே கோபலபுரத்தில் உள்ள முரசொலி மாறன் வீடு மதிப்பு ரூ 5 கோடி ரூபாய். மு.க முத்துவின் வீடு மதிப்பு 2 கோடி ரூபாய்.

7 பக்க லிஸ்ட் இருக்கு...

7 பக்க லிஸ்ட் இருக்கு...

இதே போல 7 பக்கம் லிஸ்ட் இருக்கு. சன் டி.வி கலாநிதி மாறனும், தயாநிதி மாறனும் விமானம் வாங்கியதில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் விமானத்தில் ஸ்பைஸ் ஜெட் பங்குதாரர்களாக சேர்ந்து உள்ளனர். 2018 ல் 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விமானம் வாங்க உள்ளனர் . இந்த பணமெல்லாம் எங்கிருந்து வந்தது.

அதைப் போட்டால் இந்த ஊழல்.. இதைப் போட்டால் அந்த ஊழல்

அதைப் போட்டால் இந்த ஊழல்.. இதைப் போட்டால் அந்த ஊழல்

ஜெயா டி.வியை போட்டால் கலைஞரின் ஊழல் பற்றி போடுகிறார்கள். கலைஞர் டி.வி யை திறந்தால் ஜெயலலிதாவின் ஊழல் பற்றி போடுகிறார்கள். எல்லாம் மக்கள் பணம் தானே. அப்போது தி.மு.க வும் ஊழல், அ.தி.மு.க வும் ஊழல், காங்கிரஸிம் ஊழல்.

ஊழல் செய்யாதவர் மோடிதான்

ஊழல் செய்யாதவர் மோடிதான்

இந்தியாவில் ஊழல் செய்யாத தலைவர் நரேந்திர மோடி அவர்கள் தான். அக்டோபர் 7 ஆம் தேதி 2001 ல் குஜராத்தில் முதல்வராக இருந்தார். தற்போது 13 வருடமாக முதல்வராக உள்ளார். குஜராத்தில் அவர் ஆட்சிக்கு வரும் போது 8 ஆயிரம் மெகா வாட் தான் மின்சாரம். இன்றைக்கு 13 வருடத்தில் 23 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.

வந்தா நல்லாருக்கும்

வந்தா நல்லாருக்கும்

அதனால் நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும். அப்போது இந்தியா நல்லா இருக்கும். இந்தியா பாகிஸ்தான் பிரச்சினை முடிவு பெறும், இலங்கை தமிழர் பிரச்சினை முடிவு பெறும், கச்சத்தீவு பிரச்சினை பெறும். அதனால் மாற்றம் வர வேண்டும்.

குடிக்கக் கொடுக்கிறார் மோடி

குடிக்கக் கொடுக்கிறார் மோடி

குஜராத்தில் படித்த படிக்காத இளைஞர்களுக்கெல்லாம் வேலை, குடிக்க நல்ல தண்ணீர் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு 1 லிட்டர் தண்ணீரை 10 ரூபாய்க்கு விற்கிறது. இதே போல தற்போது இருக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இருக்கும் போக்குவரத்து துறையில் ஊழியர்களுக்கு சம்பளம் பற்றாக்குறை . ஒவ்வொரு பேருந்து டெப்போக்களையும் அடகு வைத்து கொண்டு இருக்கிறார்கள். 200 க்கும் மேற்பட்ட பேருந்துகளை நீதிமன்றத்தில் நிறுத்தி வைத்து கொண்டிருக்கிறார்கள்.

முரசுக்கு வாக்களியுங்கள்

முரசுக்கு வாக்களியுங்கள்

தி.மு.கவும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து ஒட்டு மொத்த ஊழல் புரிந்துள்ளனர். ஆகவே வர உள்ள தேர்தலில் தே.மு.தி.க வின் முரசு சின்னத்திற்கு தங்களது வாக்குகளை போடுங்கள்.

சின்னச் சின்ன நடிகர்களை விட்டு

சின்னச் சின்ன நடிகர்களை விட்டு

மேலும் கேப்டனுக்கு எதிராக சின்னசின்ன நடிகர்களை தற்போது இறக்கி விட்டிருக்கிறார்கள். அந்த சின்ன சின்ன நடிகர்கள் இறக்கி விட்டிருக்கிறார்கள்.

ஜால்ராகுமார் சரத்குமார்

ஜால்ராகுமார் சரத்குமார்

இந்த ஜால்ரா குமார் சரத்குமார், சொந்த கட்சியில் சொந்த சின்னத்தில் நிற்க வழியில்லை. வேறொரு சின்னத்தில் நின்று ஜெயித்திருக்கிறார். நீங்கள் நடிகராவதற்கும், நடிகர் சங்க தலைவராக வருவதற்கும் காரணம் எங்கள் கேப்டன். தென்காசியில் 92 ஆயிரத்து 253 வாக்குகள் பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கு காரணம் எங்கள் கேப்டன் தான். அவரு பேசுகிறார் எங்க கேப்டன?

ஓசூர் சிவரஞ்சனி ஹோட்டல்.. ரூம் நம்பர 105..

ஓசூர் சிவரஞ்சனி ஹோட்டல்.. ரூம் நம்பர 105..

இப்போது பேசுகிறார் விந்தியா. ஒசூரில் சிவரஞ்சினி ஓட்டலில் ரூம் நம்பர் 105 ல் என்ன நடந்தது என தெரியாதா. அப்போது காப்பாற்றி விட்டவர் கேப்டன் தானே ? . இன்றைக்கு பேசுகிறார்.

டவுசர் ராமராஜன்

டவுசர் ராமராஜன்

டவுசர் ராமராஜன், மக்கள் நாயகனாம். உனக்கு உன் பிரச்சினையை தீர்த்து வைத்தது எங்களது கேப்டன் தான.

தமிழக முதலமைச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

தமிழக முதலமைச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

தமிழக முதலமைச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவில்லை, மின்சாரப் பிரச்சினையை தீர்க்கவில்லை. ஆகையால் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும், அப்போது தான் இந்தியா வலிமை நாடாகும். அதற்கு இங்கிருக்கும் மக்கள் எங்கள் கூட்டணி எங்களது தே.மு.தி.க வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும் என்றார் ராஜேந்திரநாத்.

யார் இவர்னு தெரியுமா.. மக்களே....

யார் இவர்னு தெரியுமா.. மக்களே....

ராஜேந்திரநாத் யார் என்று பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கும்.. நிறையப் படங்களில் போலீஸ் வேடத்தில் காமெடி வேடத்தில் வந்திருப்பார்.

வடிவேலு படங்களில்

வடிவேலு படங்களில்

வடிவேலு படங்களில் நிறைய நடித்துள்ளார். குறிப்பாக சுறா படத்தில் டுபாக்கூர் போலீஸ்காரரா வந்திருப்பார்.. ஆ...... இப்ப ஞாபகம் வருதா.. அவரேதான்.

English summary
Small time actor Rajendranath attacked Actress Vindhya for slamming DMDK president actor Vijayakanth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X