For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க முடிவு: சமாதானம் செய்த உறவினர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வது குறித்து தலைமை முக்கிய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மதுரையில் இருக்கும் அழகிரி ஆதரவாளர்கள், அவரது பிறந்தநாளை ஒட்டி தலைமைக்கு எதிராக போஸ்டர் ஒட்டினர். கட்சியில் கலகக்குரல் ஒலிக்கவே, திமுக தலைமை, அழகிரி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. கட்சியை விட்டு நீக்கப்பட்ட அழகிரி தற்போது மீண்டும் திமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் கணிந்துள்ளதாம்.

karunanidhi and azhagiri
  • தி.மு.க., உட்கட்சி தேர்தல்களில் ஏற்பட்ட பிரச்னைகள் உட்பட பல விஷயங்களை முன் வைத்து, அழகிரி, வெளிப்படையாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.
  • திமுக தலைமையானது அழகிரி மீதும் நடவடிக்கை எடுத்தது. கடந்த மார்ச் மாதம் அழகிரி கட்சியை விட்டே நீக்கப்பட்டார்.
  • இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்களிடம் கேட்டபோது, ‘ஸ்டாலினைப் பற்றி அழகிரி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு என் நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது' என்று தெரிவித்தார்.
  • கோபமடைந்த அழகிரி, கட்சி தேர்தலில் படுதோல்வி அடையும் என, சாபமிட்டார். அழகிரி தெரிவித்தது போலவே, தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்துவிட, அழகிரி மீது கருணாநிதி உட்பட கட்சியினர் அனைவரும் மிகுந்த கோபம் அடைந்தனர்.
  • அதேசமயம் குடும்ப உறுப்பினர்கள் பலரும், தேர்தலுக்கு பின் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என, கருணாநிதியை வலியுறுத்தி வருகின்றனர்.
  • தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. ஸ்டாலினின் தனிப்பட்ட முடிவுகளாலும் அழகிரி நீக்கப்பட்டதாலும் கனிமொழி தரப்புக்கு உரிய அங்கீகாரம் அளிக்காததாலும் தோல்வி ஏற்பட்டதாக ஆளுக்கொரு கருத்தை கூறினர்.
  • இதற்கிடையே, அழகிரியின் முக்கிய ஆதரவா ளர்களாக இருந்த எஸ்ஸார் கோபி, மிசா பாண்டியன் உள்ளிட்டோர் ஸ்டாலின் பக்கம் தாவினர்.
  • பத்திரிகை விமர்சனங்களில் தன்னையும் சேர்த்து கடுமையாக விமர்சித்த அழகிரியை ஏற்கமாட்டேன்' என்று சொல்லி, அதில் உறுதியாக இருந்து வந்தார் கருணாநிதி. ஆனால், ஸ்டாலினின் பிடிவாதமான நடவடிக்கைகளால், கட்சிக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக, சமீப காலமாக கருத ஆரம்பித்திருக்கிறார் கருணாநிதி. இதனால், அழகிரி விஷயத்தில் சமாதானப் போக்கை கடைபிடிக்க விரும்புகிறாம்.
  • இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளராக இருந்த ஸ்டாலினின் ஆதரவாளர் கல்யாணசுந்தரம் ஸ்டாலினை 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரி திமுக தலைவரிடம் கல்யாணசுந்தரம் கடிதம் கொடுத்தார். இதனையடுத்து அவர் நீக்கப்பட்டார்.
  • அது மட்டுமல்லாது சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் தலைமைப் பதவிக்கு கருணாநிதியை விட ஸ்டாலின் தகுதியானவர் என்று கூறி கருணாநிதியை கடுப்பேற்றியுள்ளார்.
  • அழகிரி இல்லாத நிலையிலும் கட்சிக்குள் பிரச்சினைகள் எழுந்தது திமுக தலைமையை யோசிக்க வைத்துள்ளது. இதனால் தலைமைக்கு எதிரானவர்கள், ஆதரவாளர்கள்போல் இருப்பவர்களின் பட்டியல் ரகசியமாக தயாரிக்கப்பட்டது.
  • 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் இதே நிலை நீடித்தால், திமுக எதிர்காலம் மோசமாகி விடும் என்று கருணாநிதி கருதுகிறார். எனவே, மீண்டும் கட்சியில் புத்துணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
  • சமீப காலமாக அறிவாலயத்துக்கு அதிகம் வராத கருணாநிதி, இப்போது தொடர்ந்து வர ஆரம்பித்துவிட்டார். கடந்த வாரத்தில் ஒருநாள் இரவு 8.45 மணி வரைக்கும் இருந்தார். 'பல ஆண்டுகளுக்கு முன்புதான் இரவு 9 மணி வரைக்கும் அறிவாலயத்தில் கருணாநிதியை காணலாம். அந்த மாதிரி உற்சாகப் பயணத்தை தொடங்கிவிட்டாரா தலைவர்?' என்று அவரது விசுவாசிகள் மகிழ ஆரம்பித்துள்ளார்கள்!''.
  • இதனிடையே குடும்பத்தில் இருக்கும் சிலர், அழகிரியை மீண்டும் தி.மு.க.,வுக்குள் கொண்டு வரும் எண்ணத்தோடு, அழகிரியை சந்தித்துப் பேசியிருக்கின்றனர். அப்போது, அழகிரியின் தாயார் தயாளு அம்மாள் பேச விரும்புவதைச் சொல்லி, அழகிரியையும், தயாளுவையும் போனில் பேச வைத்திருக்கின்றனர். அப்போது, தன்னை வந்து சந்திக்குமாறு, தயாளு, அழகிரியிடம் வலியுறுத்தினார். கூடவே, கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டாராம்.
  • இந்நிலையில், கடந்த வாரம் சென்னை வந்த மு.க.அழகிரி, திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க முயன்றுள்ளார். 5 நாட்களாக சென்னையில் இருந்தும் அவரால் கருணாநிதியை சந்திக்க இயலவில்லை.
  • அதேசமயம் மகள்கள் அஞ்சுகச் செல்வி, கயல்விழி சகிதமாக கோபாலபுரம் போய், தாயார் தயாளு அம்மாவை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளார். அழகிரி வருவதை அறிந்து கருணாநிதி சிஐடி காலனி வீட்டிற்கு போய்விட்டாராம்.
  • அதேசமயம் கருணாநிதியைப் பார்க்க, அழகிரியின் மகன் துரை தயாநிதி வந்தாராம். அவரோடு ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தாராம் கருணாநிதி. 'போயஸ் கார்டன்ல இருக்கிறதுனால இங்க வராம இருக்கியா?' என்றாராம் கருணாநிதி. துரை தயாநிதி வீடு போயஸ் கார்டன் ஏரியாவில் இருக்கிறது. தாத்தாவை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் பேரன். 'போயஸ் கார்டனுக்கு நிச்சயம் வருவேன்' என்று கிண்டலாகச் சொன்னாராம் கருணாநிதி.
  • இதனிடையே அழகிரிக்கும், கருணாநிதிக்கும் இடையே இரு தரப்புக்கும் இடையே குடும்பத்தினர் சிலரே சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தியதில் சுமுக முடிவு எடுக்கப்பட்டதாகவும் அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்த்துக்கொள்ள கருணாநிதி ஒப்புக்கொண்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • அழகிரி தன் கைப்பட விளக்கக் கடிதம் ஒன்றை எழுதித் தரவேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளாராம். கருணாநிதியின் இந்த முடிவில் ஸ்டாலினுக்கும் உடன்பாடு ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.
  • கட்சியின் அமைப்புத் தேர்தல் நடக்கும் இந்நேரத்தில் அழகிரியை சேர்த்தால் தொண்டர்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படக்கூடும். அதனால் தேர்தலுக்குப் பிறகு எந்த முடிவையும் எடுத்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் தரப்பில் விடாப்பிடியாக இருப்பதாக கூறப்படுகிறது.
  • தற்சமயம் அழகிரி கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று கட்சித் தலைமை நிபந்தனை விதித்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English summary
DMK has agreed to re take sacked leader M K Azhagiri into party with some conditions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X