For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விழுப்புரம் லோக்சபா தொகுதியில் திமுகவுக்கு அமோக வெற்றி கிடைக்கும்: நக்கீரன் சர்வே

By Mathi
|

சென்னை: விழுப்புரம் லோக்சபா தொகுதியில் திமுகவு அமோக வெற்றி பெறும் என்கிறது நக்கீரன் சர்வே.

தமிழகம், புதுவையில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது நக்கீரன். ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் இருக்கும் சட்டசபை தொகுதிகளில் தலா 100 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தி இம்முடிவை வெளியிட்டுள்ளது நக்கீரன்.

வட மாவட்டமான விழுப்புரத்தில் பாமக, தேமுதிக செல்வாக்கு அதிகம் இருந்தும் இத்தொகுதியில் திமுக அமோகமாக வெற்றி பெறுமாம்.

DMK huge margin leads in Villupuram LS seat

திமுக அமோக வெற்றி

விழுப்புரம் தொகுதியில் திமுக வேட்பாளர் முதலிடத்திலும் அதிமுகவுக்கு 2வது இடம் தேமுதிக வேட்பாளருக்கு 3வது இடம் கிடைக்குமாம்.

திருக்கோவிலூர் சட்டசபை..

திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில் அதிமுகவுக்கு 30, திமுகவுக்கு 28, தேமுதிகவுக்கு 27 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விழுப்புரத்தில் திமுகவுக்கு பின்னடைவு

விழுப்புரம் சட்டசபை தொகுதியில் திமுகவுக்கு 3வது இடம்தான். அதிமுகவுக்கு 31, தேமுதிகவுக்கு 29, திமுகவுக்கு 23 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டையில் திமுக..

விஜயகாந்த் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி அளப்பரை காட்டிய உளுந்தூர்பேட்டை தொகுதியில் அக்கட்சிக்கு 15 பேர்தான் ஆதரவாம். திமுகவுக்கு 42, அதிமுகவுக்கு 31 பேர் ஆதரவாம்.

வானூரிலும் தேமுதிகவுக்கு அடி

இதேபோல் வானூரில் தேமுதிகவுக்கு 16 பேர்தான் ஆதரவாம். திமுகவுக்கு 34, அமுகவுக்கு 30 பேர் ஆதரவாம்.

விக்கிரவாண்டியில் அதிமுகவுக்கு மரண அடி

விக்கிரவாண்டி லோக்சபா தொகுதியில் அதிமுவுக்கு 100 பேரில் 10 பேர்தான் ஆதரவாம். திமுகவுக்கு 44 பேரும், தேமுதிகவுக்கு 24 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திண்டிவனத்தில் சமபலம்

திண்டிவனத்தில் திமுக 26, அதிமுக 25, தேமுதிக 22 பேர் ஆதரவு என ஏறக்குறைய சமபலத்தில் இருக்கின்றனர்.

மொத்தமாக..

ஒட்டுமொத்தமாக 600 பேரில் திமுகவுக்கு 197, அதிமுகவுக்கு 157, தேமுதிகவுக்கு 133 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 4வது இடத்தில் சிபிஎம் வேட்பாளருக்கு 34 பேர் ஆதரவு கொடுத்துள்ளனர்.

நோட்டாவைவிட காங்கிரஸுக்கு கம்மி

விழுப்புரம் தொகுதியில் நோட்டாவுக்கு 60 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றால் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 19 பேர்தான் ஆதரவாம்.

English summary
According to Nakhheran Survey, DMK Candidate may get huge margin vote in VIlluppuram constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X