For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவண்ணாமலையில் திமுக அலை.. நக்கீரன் சர்வே

|

சென்னை: நக்கீரன் வாரமிருமுறை இதழ் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக உள்ளது என்பது குறித்த கருத்துக் கணிப்பை வெளியி்ட்டுள்ளது.

40 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான சர்வே தற்போது வெளியாகியுள்ளது. அதில் தொகுதி வாரியாக யாருக்கு ஆதரவு காணப்படுகிறது என்பதை சர்வே கோடிட்டுக் காட்டியுள்ளது.

திருவண்ணாமலை தொகுதி நிலவரம் இதோ

ஜாதி ஆதிக்கம் இல்லை

ஜாதி ஆதிக்கம் இல்லை

தொகுதியில் கட்சிகளின் ஆதிக்கமே ஓங்கியிருப்பதையும் சாதிகளின் ஆதிக்கம் இல்லாதிருப்பதையும் உணர முடிந்தது.

காடுவெட்டி குருவுக்கு ஆப்பு வைத்தோம்- வன்னியர்கள்

காடுவெட்டி குருவுக்கு ஆப்பு வைத்தோம்- வன்னியர்கள்

வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த பழனி, ராமமூர்த்தி போன்றவர்கள், திமுகவுக்கே எங்கள் வாக்கு. காரணம் முற்போக்குக் கொள்கை உள்ள சுயமரியாதைக் கட்சி அது'' என்றனர்.

ஜாதியைப் பத்திப் பேசாதீங்க

ஜாதியைப் பத்திப் பேசாதீங்க

அப்படின்னா முதலியார் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. அண்ணாதுரைக்குத்தான் ஓட்டுப் போடுவீங்களா? என்று கேட்டபோது, சாதியைப் பத்திப் பேசாதீங்க. ஜாதியை நம்பி, ஜாதி வெறியைத் தூண்டி இங்க போன சட்டமன்றத் தேர்தலில் காடுவெட்டி குரு களமிறங்கினார். அவரை வன்னிய மக்களான நாங் கள்லாம் சேர்ந்து 1 1/2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிச்சோம் என்றனர்.

குடிநீர், விலைவாசி பிரச்சினை

குடிநீர், விலைவாசி பிரச்சினை

தொகுதியில் குடிநீர், விலைவாசி போன்ற பிரச்சினைகளின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது.

வாரத்துக்கு ஒரு நாள் தான் குடிநீர்

வாரத்துக்கு ஒரு நாள் தான் குடிநீர்

திருவண்ணாமலை பேகோபுரத் தெருவைச் சேர்ந்த மஞ்சுளா, ""வாரத்துக்கு ஒருநாள்தான் நகராட்சி யில் குடிதண்ணீர் விடறாங்க. அதனால் மத்த நாளெல்லாம் தண்ணிக்காகத் தெருத் தெருவா அலையிறோம். நகராட்சிச் சேர்மனிடம் போய்க்கேட்டா அதிகாரிகளைக் கேளுங்கன்னு சொல்றார். நாங்க அதிகாரிகளுக்கா ஓட்டுப் போட்டோம்?'' என்கிறார் காட்டமாய்.

விஜயகாந்த்திடம் பயர் இருக்கு

விஜயகாந்த்திடம் பயர் இருக்கு

கீழ்பென்னாத்தூர் வெள்ளை யப்பனோ, ""குடிக்கிறார், உளர்றார்னு சொல்றீங்க. இருந்தாலும் விஜயகாந்த்துக்கிட்ட ஒரு பயர் இருக்கு'' என்கிறார் உற்சாகமாக.

இலைக்கு கிடையாது இந்த முறை ஓட்டு

இலைக்கு கிடையாது இந்த முறை ஓட்டு

ஜோலார்பேட்டை ராமசாமி போன தடவை இலைக்குப் போட்டு வீரமணியை ஜெயிக்க வச்சோம். மந்திரி ஆனார். ஆனா எங்க ஊர் ரோடு களைப் பாருங்க... ஒரு எழவையும் அவர் செய்யலை. அதனால் இந்த முறை மாத்திப் போடப்போறேன்'' என்கிறார் காரமாய்.

திருப்பத்தூரில் அதிக ஆதரவு

திருப்பத்தூரில் அதிக ஆதரவு

6 சட்டசபைத் தொகுதிகளில் திருப்பத்தூரில்தான் திமுகவுக்கு அதிக ஆதரவு காணப்பட்டது. அதாவது 46 சதவீதம் பேர் திமுகவை ஆதரித்துள்ளனர். அடுத்து திருவண்ணாமலையில் ஆதரவு அதிகம் காணப்படுகிறது.

அதிமுகவுக்கு செங்கம்

அதிமுகவுக்கு செங்கம்

அதிமுகவுக்கு செங்கம் சட்டசபைத் தொகுதியில் நல்ல ஆதரவு காணப்படுகிறது. அதாவது 46 சதவீதம். அதேபோல கலசப்பாக்கம் தொகுதியில் 43 சதவீத ஆதரவு காணப்பட்டது.

3வது இடத்தில் பாமக

3வது இடத்தில் பாமக

3வது இடத்தில் பாமக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மிகவும் பின் தங்கி 4வது இடத்தில் இருக்கிறது.

திமுக கை ஓங்குகிறது

திமுக கை ஓங்குகிறது

பொதுவாக இந்தத் தொகுதியில் திமுகவின் கை ஓங்கியிருப்பதாக நக்கீரன் கூறுகிறது. வாக்கெடுப்பி் கலந்து கொண்டவர்களில் 231 பேர் திமுகவுக்கும், 217 பேர் அதிமுகவுக்கும், 116 பேர் பாமகவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

English summary
Accoding to Nakkeeran survey, DMK has been better placed over ADMK in Thiruvannamalai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X