For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருத்தணி அருகே வாக்குப்பதிவு எந்திரத்துடன் 'குடி'மகன் ஓட்டம்

By Siva
|

திருவள்ளூர்: திருத்தணி அருகே குடிபோதையில் வாக்களிக்க வந்த ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தணி அருகே உள்ளது நல்லாத்தூர். அந்த ஊரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு மாலை 4.45 மணி அளவில் குடிபோதையில் ஒருவர் வந்தார்.

வந்தவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் அருகே சென்றார். அவர் எந்திரத்தில் உள்ள பட்டனை அழுத்தி வாக்குப்பதிவு செய்யாமல் எந்திரத்தையே தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார்.

வாக்குப்பதிவு எந்திரத்தோடு ஓட்டம் பிடித்த நபரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
A drunkard escaped with an electronic voting machine near Thiruthani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X