For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திண்டுக்கல்: தேங்கிக் கிடக்கும் “பூத் சிலிப்”கள் - உதவி மையம் மூலம் வழங்க திட்டம்

|

திண்டுக்கல்: தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 1.15 லட்சம் "பூத் சிலிப்" கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படாமல் தேங்கியுள்ளது.

இதனால், அங்கு பலபேரின் ஓட்டு உரிமை ஊசலில் உள்ளதாக கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனாலும், இதுவரை மீதி இருக்கும் சிலிப்புகள் உரியவர்களை சென்று அடைந்த பாடில்லை.

வீடுவீடாக பூத்சிலிப்:

வீடுவீடாக பூத்சிலிப்:

திண்டுக்கல் மாவட்டத்தில் 1637711 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வீடு வீடாக சென்று புகைப்படத்துடன் கூடிய "பூத்சிலிப் " களை வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

பணி துவக்கம்:

பணி துவக்கம்:

இதையடுத்து ஒவ்வொரு பகுதிகளிலும் விஏஓக்கள், ஊராட்சி செயலர்கள் ,மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் மூலம் "பூத்சிலிப்" வழங்கும் பணி ஏப்ரல் 11 இல் துவங்கியது.

நேற்றே முடிவடைந்தது:

நேற்றே முடிவடைந்தது:

இந்த பணி நேற்றுடன் முடிவடைந்தது. பழநி தொகுதியில் 242727 வாக்காளர்களில் 20405 பேருக்கு வழங்கப்படவில்லை. ஒட்டன்சத்திரத்தில் 214673 வாக்காளர்களில் 5161 பேருக்கும் ஆத்தூரில் 259159 வாக்காளர்களில் 28269 பேருக்கும் நிலக்கோட்டையில் 205765 வாக்காளர்களில் 2643 பேருக்கும் வழங்கப்படவில்லை.

தேர்தல் அன்று உதவிமையம்:

தேர்தல் அன்று உதவிமையம்:

நத்தத்தில் 245518 வாக்காளர்களில் 23018 பேருக்கும் திண்டுக்கல்லில் 231168 வாக்காளர்களில் 32363 பேருக்கும் வேடசந்தூரில் 238701 வாக்காளர்களில் 3772 பேருக்கும் மொத்தமுள்ள 1637711 வாக்காளர்களில் 115631 பேருக்கு வழங்கப்படவில்லை."பூத்சிலிப்" பெறாதவர்களுக்காக தேர்தல் அன்று உதவி மையம் அமைக்கப்பட உள்ளது.

English summary
Dindukal district booth slips till now didn't distribute to the people for vote. Election commissions decided to arranges help center when the time of Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X