For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கிழிஞ்சது' கிருஷ்ணகிரி...பாமகவின் ஜி.கே.மணிக்கு 3வது இடமே.. வெல்கிறது திமுக!!

|

கிருஷ்ணகிரி: பாமக தலைவர் ஜி.கே.மணி கிருஷ்ணகிரியில் தோல்வி முகத்தில் இருப்பதாக நக்கீரன் சர்வே கூறுகிறது.

இங்கு திமுக வெல்லும் என்றும் அதிமுக 2வது இடத்தையே பிடிக்கும் என்றும் அது கூறுகிறது.

அதேசமயம், திமுக அதிமுக இடையே மிகச் சிறிய அளவில்தான் வெற்றி தோல்வி வித்தியாசம் உள்ளது.

தர்மபுரி தாக்கம்

தர்மபுரி மோதலின் வெப்பம் இன்னும் இங்கே பல பகுதி களிலும் இருப்பதை உணர முடிகிறது. போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டினம் பகுதிகளில் இருக்கும் வன்னிய சமூகத்தினர் "எதிர்தரப்பால் நாங்க அவமானப்படறோம். வெளில போனாலே பி.சி.ஆர். வழக்குப் போடுவாங்க போலிருக்கு'' என காட்டம் காட்ட... அதற்கு எதிர்தரப்போ, "எங்களை மனுஷனா கூட அவங்க மதிக்கிறதில்லை. அவமானப் பிறவியா நாங்க?'' என்கிறார்கள் பதிலுக்கு.

G K Mani to face defeat in Krishnagiri: Nakkeeran survey

மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் தளி

தளி, பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் கிருஷ்ணன், "எங்க மலைக் கிராமத்தின் பேரு பெட்ட முகிவாலம். எங்க கிராமங்கள்ல எங்காவது பீஸ் போனாக்கூட ஆளுக வந்து சரிபண்ண ஒருவாரம் ஆயிடும். அதனால் மோடி வந்தா எங்க நிலைமை மாறும்னு நினைக்கிறோம்'' என்கிறார் நம்பிக்கையாய்.

அதிமுகவுக்கு ஆப்பு வைக்கும் மின்வெட்டு

மின்வெட்டு, இலைத்தரப்பின் வோல்ட்டேஜைக் குறைப்பதையும் உணர முடிந்தது. வேப்பனஹள்ளி பாஷா, "தினசரி 12-ல் இருந்து 15 மணி நேரம் வரை கரண்ட் போயிடுது. அதனால் இருட்டும் புழுக்கமும்தான் வாழ்க்கையா இருக்கு. பசங்க படிக்க முடியலை. அதனால் இந்தமுறை இலைக்கு ஓட்டு இல்லை'' என்றார்.

வேப்பனஹள்ளியில் திமுக ஆதரவு

அதிமுக வேட்பாளரின் சொந்த ஊரான வேப்பனஹள்ளியிலேயே திமுக ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. "இலவசத்தைக் கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்கலாம்னு பாக்குறாக. எலைக்கு எதிராதான் ஓட்டுப் போடுவோம்'' என்கிறார்கள் இங்கு.

இளைஞர்களிடம் நோட்டா ஆர்வம்

இளைஞர்கள் சிலரை நோட்டோ கவர்கிறது. "யாரு வந்து இங்க என்ன ஆகப்போகுது. அரசியலே சாக்கடையா இருக்கு'' என்கிறார் நோட்டோ ரசிகரான ஊத்தங்கரை பாபு.

கைக்கு ஆதரவாக தியாகி

சுண்டகிரியில் தியாகி பெரியசாமி என்பவர், "எனக்கு 94 வயசாகுது. கண்ணு சரியா தெரியலை. காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். அவருக்கு நன்றிக்கடனா நான் எப்பவும் கை பக்கம்தான் இருப்பேன்'' என்றார் நெகிழ்ச்சியாய்.

சிறுபான்மை ஆதரவும் திமுகவுக்கே

தொகுதியில் பரவலாக இருக்கும் இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் பெரும்பான்மை ஆதரவு சூரியத் தரப்பிற்கே இருக்கிறது.

பாமகவுக்கு ஆதரவாக மத்தாஸ் பள்ளி

மத்தாஸ்பள்ளியில் பாமகவுக்கு ஆதரவு காணப்படுகிறது.

முதலிடத்தில் திமுக

இப்போதைய கள நிலவரப்படி திமுக முதலிடத்தில் உள்ளது. 196 பேர் திமுகவை ஆதரிக்கின்றனர்.

அதிமுகவுக்கு 2வது இடம்

அதிமுகவுக்கு 191 பேர் ஆதரவு தெரிவித்து 2வது இடத்தில் அமர்த்துகின்றனர்.

3வது இடத்தில் பாமக

பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு 165 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர் 3வது இடத்தைப் பிடிக்கிறார்.

English summary
PMK's G K Mani may face a defeat in Krishnagir, says: Nakkeeran survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X