For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை போர்க்குற்றம்... ஐ.நா. குழுவுக்கு மத்திய அரசு விசா வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை

Google Oneindia Tamil News

Give visa to UN team: G.K.Vasan
சென்னை: இலங்கை போர்க்குற்றம் தொடர்பான விசாரணையை இந்தியாவில் நடத்த ஐ.நா. குழுவுக்கு மத்திய அரசு விசா வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஐ.நா. சபையில் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றபட்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

ஐ.நா. சபையின் அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவை இலங்கையில் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது ஏற்புடையதல்ல. இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்த விசாரணையை இந்தியாவில் நடத்தும் நோக்குடன் இந்திய அரசுக்கு ஐ.நா. விசாரணைக்குழு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்தி தமிழக மக்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதோடு ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பா.ஜ.க. அரசு புறக்கணிப்பதாக அமைகிறது.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வருகை தர இருக்கும் ஐ.நா. விசாரணை குழுவுக்கு மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு விசா வழங்கி விசாரணை முறையாக, முழுமையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினரின் தவறான அணுகுமுறையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மிகுந்த கவலைக்குறியதாக ஆகியிருக்கிறது. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

கடந்த ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் தொடர் முயற்சியால் இதுவரையில் இரு நாட்டு மீனவ பிரதிநிதிகள் இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். மீண்டும் தொடர்ந்து மீனவ பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு அதன் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண தற்போதைய பா.ஜ.க. அரசு வழிவகை செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்கவும் எல்லை தாண்டும் பிரச்சினையை தவிர்ப்பதற்கும் மத்திய அரசு இலங்கை அரசோடு பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு உடனடி நிரந்தர தீர்வு காண வேண்டும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The former union minister G.K.Vasan has demanded the centre to allow the UN team to conduct investigation in Indian against Srilanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X