For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னைக்காவது மாலையில் அபார்ட்மென்ட் வாசலில் நின்று இதை பார்த்திருக்கீங்களா?

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: அபார்ட்மென்ட் வாசலில் மாலை வேளையில் என்றைக்காவது நின்று இந்த விஷயத்தை கவனித்துள்ளீர்களா?

அப்படி என்ன அபார்மென்ட் வாசலில் இருக்கு என்று நீங்கள் நினைக்கலாம். இருக்கே. அதை பற்றி தான் இந்த செய்தியே. நகரங்களில் மாடி மேல் மாடியாக கட்டும் அபார்ட்மென்ட்கள் ஏராளமாக உள்ளன.

அந்த அபார்ட்மென்ட்களில் வசிப்போரில் பெரும்பாலனவர்கள் வீட்டு வேலைகளை செய்ய பணிப்பெண்களை பணியமர்த்தியுள்ளனர்.

எஜமானிகள்

எஜமானிகள்

வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டும் அல்லாது வீட்டில் உள்ள பெண்களும் வீட்டு வேலைகளை செய்ய ஆட்கள் வைத்துள்ளனர்.

ஏம்மா?

ஏம்மா?

ஏம்மா வீட்டில் தானே இருக்கிறீர்கள். உங்கள் வீட்டு வேலையை நீங்களை செய்யக் கூடாதா என்று கேட்டால் நான் கஷ்டப்படக்கூடாதே என்று என் கணவர் வீட்டு வேலைக்கு ஆள் வைத்துள்ளார் என பெருமையாக கூறுகிறார்கள்.

உடல் பருமன்

உடல் பருமன்

வீட்டு வேலைகளை செய்ய ஆட்கள் வைத்திருப்பதால் பல பெண்கள் வேலை எதுவும் செய்யாமல் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். உடல் எடையை குறைக்க ஜிம், கிளினிக் என்று அலைகிறார்கள்.

மாலை நேரத்தில்

மாலை நேரத்தில்

மாலை நேரத்தில் அபார்ட்மென்ட்களில் வேலை செய்யும் பெண்கள் வீட்டுக்கு கிளம்புவார்கள். அதே சமயம் எஜமானிகள் உடல் எடையை குறைக்க லொங்கு லொங்கு என்று மூச்சு வாங்க வாக்கிங் செல்வார்கள்.

கும்

கும்

பணிப்பெண்களோ தேவையில்லாத சதை இல்லாமல் ஜிம் போகாமலேயே கின்னென்று இருப்பதையும், அவர்களின் எஜமானிகள் குண்டாக உருண்டு வருவதையும் தான் அபார்ட்மென்ட் வாசலில் மாலை நேரத்தில் பார்க்கலாம்.

டாக்டர்கள்

டாக்டர்கள்

வாரத்தில் ஒரு நாள் பணிப்பெண்ணுக்கு விடுப்பு கொடுத்துவிட்டு வீட்டு வேலைகளை நீங்களே செய்வது உடலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதுவே தினமும் வீட்டு வேலைகளை செய்தால் எவ்வளவு நலமாக வாழலாம் என்று யோசித்து பாருங்கள் பெண்களே!.

English summary
Have you ever seen this scene in the gate of many apartments in the evening?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X