For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நோக்கியாவின் ரூ2,400 கோடி வருமான வரி ஏய்ப்பு விவகாரம்: தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: நோக்கியா நிறுவனம் ரூ2,400 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்ட நோக்கியா செல்போன்கள் ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நோக்கியா நிறுவனம் இந்தியாவுக்குள் விற்பனை செய்ததாக தமிழக அரசின் வணிக வரித்துறை குற்றம்சாட்டியிருந்தது.

HC notice to Tamil Nadu govt on Nokia petition

இப்படி உள்நாட்டு விற்பனையில் ஈடுபட்டதற்காக விற்பனை வரியாக 2 ஆயிரத்து 400 கோடி செலுத்த வேண்டும் எனவும் தமிழக அரசின் வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் நோக்கியா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசின் ரூ4 ஆயிரம் கோடி வரிவிதிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நோக்கியா நிறுவனம் வழக்கை சந்தித்து வருகிறது.

English summary
The Madras High Court on Friday issued a notice to the Tamil Nadu government on a petition filed by handset major Nokia, challenging the state government’s notice slapping Rs. 2400 crore tax dues on it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X