For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 நிமிஷம் பேச முடியுமா.. ஸாரிங்க நான் "ஹனிமூன் டிரிப்"ல இருக்கேனே.. பரவாயில்லை சார்..!

Google Oneindia Tamil News

சென்னை: பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்த நேரம். லோக்சபாவில் கடும் கொந்தளிப்பு.. எதிர்க்கட்சிகளை சமாளிக்க முடியாமல் மன்மோகன் அரசு கடுமையாக தத்தளித்த சமயம் அது... பிரணாப் முகர்ஜியோ நெருப்பின் மீது நின்று கொண்டிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர்களை தனியாக அழைத்து சபாநாயகர் முன்பு சமரசம் பேசிக் கொண்டிருந்தபோது பிரணாபுக்கு ஒரு போன் வந்தது. எடுத்துப் பேசியவர் சடாரென்று கோபமாகி, போனை வைக்கிறீங்களா இல்லையா என்று கத்தி விட்டார்.. அது ஒரு வங்கியிலிருந்து வந்த 'லோன் வேணுமா.. சார்'.. டைப் போன் கால்.!

இப்படிப்பட் கால்களை அனேகமாக இந்தியாவில் செல்போன் வைத்துள்ள அத்தனை பேருமே குறைந்தது ஒருமுறையாவது சந்தித்திருக்க முடியும்.. சங்கடப்பட்டிருக்க வேண்டும்.

அப்படி ஒரு கால் இன்று இந்த செய்தியை எழுதிக் கொண்டிருப்பவருக்கும் வந்தது. அந்தக் காலைத் தவிர்க்க பகீரதப் பிரயத்தனம் செய்தபோதும், எதிர்முனையில் அழகு கொஞ்சப் பேசிய பெண் எப்படியெல்லாம் தனது காரியமே குறியாக இருந்தார் என்பதுதான் விசேஷமானது.

வாங்க உரையாடலுக்குள் போகலாம்.

ஹலோ..

ஹலோ..

அழைத்தவர் - Good evening sir. This is...... ஐஷு ஐஷு பேங்க்ல இருந்து பேசுறேன் சார்.. ஒரு 2 நிமிஷம் உங்க கிட்ட பேசலாமா சார்?

கேட்டவர் - ஸாரிங்க.. நான் அவுட் ஆப் ஸ்டேஷன்.. ஒரு பெர்சனல் டிரிப்.. பேச நேரமில்லையே...

இரண்டே நிமிஷம்தான் சார்

இரண்டே நிமிஷம்தான் சார்

அழைத்தவர் - ஸாரி சார்.. இருந்தாலும் இரண்டே இரண்டு நிமிஷம்தான்.. !

கேட்டவர் - அதுல பிரச்சினை இல்லை.. ஆனா பாருங்க நான் இப்ப ஹனிமூன் டிரிப்ல இருக்கேனே.. என்ன பண்ணலாம்...?

பரவாயில்லை சார்..

பரவாயில்லை சார்..

அழைத்தவர் - ஓ அப்டியா சார்.. வெரி ஸாரி டு டிஸ்டர்ப் யூ சார்.. உங்க மிஸஸ் கிட்டயும் ஸாரி சொல்லிக்கிறேன் சார்.. பட், 2 நிமிஷம் போதும் சார் எனக்கு.. ஸ்கீ்மை மட்டும் சொல்லிடறேன். கேட்டுக்கங்க சார்.. முடிவை அப்புறம் கூட சொல்லுங்க சார்.. ஃப்ரீ ஆனப்புறம்.

கேட்டவர் - நான் எப்ப ஃப்ரீ ஆவேன்னு எனக்கே தெரியலையேங்க.. டைட் ஷெட்யூல்ல இருக்கேனே.. பேசவே நேரம் இல்லையே....

ரிலாக்ஸ் பண்ணிக்கலாமே சார்

ரிலாக்ஸ் பண்ணிக்கலாமே சார்

அழைத்தவர்- புரியுது சார். பட் 2 நிமிஷம் ரிலாக்ஸ் பண்ணிக்க மாட்டீங்களா சார்.. அது மாதிர நினைச்சுப் பேசுங்களேன் சார்..

கேட்டவர் - உங்க பேரு என்ன சொன்னீங்க... யா, அதாவது, நான் இந்த இடத்துக்கு வந்து 2 நாளாகுது.. 5 நாள் பிளான்.. 2 நாள் போனதுக்கே நான் ரொம்ப சோகமாக இருக்கேன். சீக்கிரமே முடிஞ்சிருச்சேன்னு.. இதுல 2 நிமிஷம் உங்களுக்காக ஒதுக்கிறது ரொம்ப டூமச்னு நான் நினைக்கிறேன்..

சரி சார் நான் அப்றம் பண்ணட்டா..

சரி சார் நான் அப்றம் பண்ணட்டா..

அழைத்தவர் - ஸாரி சார் நான் உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.. நான் வேணும்னா அப்புறம் பண்ணட்டுமா சார்...

கேட்டவர் - எப்புறம்?

அழைத்தவர் - ஒரு ஒன் அவர் கழிச்சுப் பண்ணட்டா சார்...

கேட்டவர் - தாராளமா பண்ணுங்க.. ஆனா நான் போனை சுவிட்ச் ஆப் பண்ணிருப்பேனே என்ன பண்ணுவீங்க...

நீங்க பண்ண மாட்டீங்க சார்

நீங்க பண்ண மாட்டீங்க சார்

அழைத்தவர் (இப்போது ரொம்ப சகஜமாக பேச ஆரம்பித்து விட்டார்) - கண்டிப்பா பண்ண மாட்டீங்க சார்.. நீங்க ஜென்டில்மேன் சார்.. இவ்ளோ பொறுமையா பேசறீங்களே.. நிச்சயம் ஸ்விட்ச் ஆப் பண்ண மாட்டீங்க. ஸ்கீமை மட்டும் கேட்டுட்டுங்க போதும் சார்.. அப்புறம் பிடிச்சிருந்தா நீங்களே கால் பண்ணி சொன்னா போதம் சார்.

கேட்டவர் - பாருங்க ..... நீங்க எப்படி உங்க கடமையிலே கண்ணா இருக்கீங்களோ.. அதே போலத்தானே மத்தவங்களும் இருப்பாங்க.. நான் என்ன வேலையா வந்திருக்கேன்னு சொல்லியும் கூட விட மாட்டேங்கிறீங்களா.. இது நியாயமா. பாவம் இல்லையா.. ?

ஆல் தி பெஸ்ட் சார்.. நான் நாளைக்குப் பண்றேன்!

ஆல் தி பெஸ்ட் சார்.. நான் நாளைக்குப் பண்றேன்!

அழைத்தவர் - எஸ் சார். கண்டிப்பா சார்.. புரியுது சார்.. ஓகே சார். உங்க நேரத்தை எனக்காக ரொம்பவே ஒதுக்கிட்டீங்க சார். பரவாயில்லை சார். நான் நாளைக்கு பண்றேன் சார்.. ஹேவ் எ நைஸ் அவுட்டிங் சார்.. ஸாரி ஒன்ஸ் அகெய்ன் சார்... தேங்க் யூ சார்!

நாளைக்கும் போன் வந்தா என்ன பொய் சொல்றதுன்னு தெரியலையே....!

English summary
Once former Finance minister Pranab Mukherjee got a call from a bank for loan. He was terrribly irritated over the call and now this writer got a call . See what happened next.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X