தமிழக செய்திகள்
தமிழகத்தில் ஆறுதல் தந்த கோடை மழைக்கு 6 பேர் பலிசென்னை: தமிழ்நாட்டில் கோடையின் உக்கிரமான அக்னி நட்சத்திரம் உக்கிரத் தாண்டவமாடும் அதே நேரத்தில் ஆறுதல் அளித்து வரும் கோடை மழையால் 6 பேர் பலியாகி இருக்கின்றனர்.தமிழகம் முழுவதும் கன வெயில் கொளுத்திக் கொண்டுள்ளது. தலைநகர் சென்னையில் தலை முழுவதும் கொப்புளம் வராத குறையாக வெயில் வெளுகத்துக் கட்டுகிறது. இருப்பினும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆறுதல் தரும் வகையில்
ஜனாதிபதி தேர்தல்: காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளருக்கே ஆதரவு- கருணாநிதிசென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்னிறுத்தும் வேட்பாளரையே தி.மு.க. ஆதரிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியதாவது:கேள்வி: மத்திய அரசு இன்றோடு மூன்றாண்டுகளை முடித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் சார்பில் தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறதே, அதைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்?பதில்: மத்திய அரசின் சார்பில் தமிழகத்திலே
டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?சென்னை: டாஸ்மாக் கடைகளில் புதிய வகை பிரெஞ்சு பிராந்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை எப்படிக் குடிக்க வேண்டும் என்பது குறித்து ஒரு செயல்முறை விளக்கம் அளித்துள்ளனர் அந்த பிராந்தியை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ள நிறுவனத்தார்.பிரான்ஸ் நாட்டில் புகழ் பெற்ற கிரேப் பிராந்தியான இந்த ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை டாஸ்மாக் கடைகளில் கேட்டு வாங்கிக் குடிக்கலாம். ஆனால் வழக்கமான
+2 தேர்வில் நாமக்கல் சுஷ்மிதா முதலிடம்-3 இடங்களும் நாமக்கல்லுக்கே!!சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாகியது. இதில் நாமக்கல்லைச் சேர்ந்த எஸ்.கே.வி மேல்நிலைப்பள்ளி மாணவி சுஷ்மிதா 1189 மதிப்பெண்களுடன் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.2வது இடமும் நாமக்கல்லுக்கேஅதே நாமக்கல்லைச் சேர்ந்த எஸ்.கே.வி மேல்நிலைப்பள்ளி கார்த்திகா, நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவர் அசோக்குமார், நாமக்கல் விவேகானந்தா பள்ளி மாணவர் மணிகண்டன் ஆகியோர் 1188
அகப்பையை பதம் பார்ப்போம் என்று ஜெ. சொல்வதிலேயே அவரது சகிப்புத் தன்மை தெரிகிறது- ராமதாஸ்திண்டிவனம்: ஆளுங்கட்சி என்ற பானையில் சமைக்கப்படும் சோற்றை பதம் பார்க்கும் அகப்பையாக எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டும் என அண்ணா கூறியதை ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பானையை பதம் பார்க்கவோ, உடைக்கவோ அகப்பைகள் முயன்றால் அந்த அகப்பைகள் பதம் பார்க்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதில் இருந்து அவரது சகிப்பு தன்மை எவ்வளவு? என தெரிகிறது என்று பாமக நிறுவனர்
