ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம்
தமிழக செய்திகள்

Sushma Swarajதனி ஈழம் கேட்கக் கூடாது-மதுரையில் சுஷ்மா சுவராஜ் கண்டிப்பு!

மதுரை: தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்கிறேன். அங்குள்ள தமிழர்கள், தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கையே தேவை என்று கூறும்போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை. தனி ஈழ கோரிக்கையை பாஜக ஆதரிக்கவில்லை என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்
நெல்லையை உலுக்கும் டெங்கு: நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

நெல்லை: டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சாதாரண காய்ச்சல் வந்தால் கூட டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்ற பயத்தில் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், கடையம் பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 11 பேர்
மாற்றுத் திறனாளிகளுக்கான தனி ஆதார வளமையம் அமைக்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனி ஆதாரவள மையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆதார வளமையம்மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல், இக்குழந்தைகளின் தேவைகளை பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில், நாட்டிலேயே முதன்
உல்லாசம் நகரில் பயங்கரக் கொலை... கள்ளக்காதலில் டிரைவரைப் போட்டுத் தள்ளிய நண்பன்!

சென்னை: சென்னை செங்குன்றத்தில் உள்ள உல்லாசம் நகர் என்ற இடத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் தனது நண்பனை கூலிப்படையை கூட்டி வந்து சரமாரியாக கொலை செய்தார் ஒரு நபர். கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.தடுக்கி விழுந்தால் ஒரு கள்ளக்காதல் கொலையாகி விட்டது தமிழகத்தில். தினசரி ஒரு கொலை இப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது.
Duraimuruganஎந்த ஆயுதத்தால் எதிரியை வீழ்த்தலாம் என்று மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்: துரைமுருகன்

சென்னை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை கட்சித் தலைவராக ஏற்க யாரும் மறுப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்று அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரியன் பெற்ற சுழல்பூமி' என்ற தலைப்பில் மாநில அளவிலான கவிதைப் போட்டியை திமுக இளைஞரணியினர் நடத்தினர். இதில் 1000க்கும் அதிகமானோர் கவிதைகள் எழுதியதால் அதில்
இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'!

சென்னை: பேஸ்புக் மூலம் மோசடியாக காதல் வலை வீசி சென்னையைச் சேர்ந்த சில பெண்களிடம் வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் ரூ. 40 லட்சம் வரை சுருட்டியுள்ளனர். ஏமாந்து போன பெண்கள் காவல்துறையின் உதவியை நாடி வந்துள்ளனர்.கண்ணால் கண்டு காதலிக்கும் காலம் ஓல்டு பேஷனாகிவிட்டதால் இப்பொழுது அதிகம் பேர் பேஸ்புக், இண்டர்நெட் மூலம் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதைப் பயன்படுத்தி
வெயிலின் தாண்டவத்தை சற்றே தணித்த கோடை மழை...!

சென்னை: அடடடடா, எப்பப்பா குறையும் இந்த வெயில்... இதுதான் தமிழகத்தின் எந்தப் பக்கம் போனாலும் மக்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள். அந்த அளவுக்கு வெயில் வெளுத்து கட்டிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் ஆங்காங்கே கோடை மழை பொழிந்தபடி இருப்பதால் பெரும் அவியலிலிருந்து மக்கள் தற்காலிகமாக தப்பியுள்ளனர்.கோடை மழை காரணமாக பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
Karunanidhiஜூன் மாதத்தின் பெயர் இனி 'கலைஞர் மாதமாம்'.. சொல்கிறது திமுக மாணவர் அணி!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி பிறந்த மாதமான ஜூன் மாதத்தை இனி கலைஞர் மாதம் என்று அழைக்க திமுக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தி.மு.க மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.அப்போது அவர் கூறுகையில்,
Minister MSM Anandan500 கிலோ கோவில் தங்கத்தை திமுக அரசு திருடியதாக சந்தேகப்படுகிறோம்-அமைச்சர் பரபரப்பு புகார்!

சென்னை: திமுக ஆட்சியில் இருந்தபோது இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களுக்கு உரித்தான கோவில்களில் இருந்த 500 கிலோ தங்கத்தை பல்வேறு பணிகளுக்காக எடுத்துள்ளனர். அவற்றை அவர்கள் அபகரித்து விட்டதாக முதல்வர் ஜெயலலிதா சந்தேகப்படுகிறார் என்று தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் எம்எஸ்எம் ஆனந்தன் பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார்.சட்டசபையில் நடந்த தனது துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப்
கே.ஜி. பாலகிருஷ்ணன் வழக்கில் மத்திய அரசு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான கே.ஜி. பாலகிருஷ்ணன் மீதான நடவடிக்கைக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.வழக்கு என்ன?தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இருந்து வருகிறார். அவர் தலைமை நீதிபதியாக பதவி வகித்த
நெல்லையில் 2 ஆண்டுகளில் ரூ.25 கோடி மின் திருட்டு: அதிர்ச்சி தகவல்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் பல கோடி ரூபாய்க்கு மின்திருட்டு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதமிழகம் முழுவதும் மின்சார பற்றாக்குறை நிலவுவதும், அதற்கு நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கினால் பற்றாக்குறை தீரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே நெல்லை மாவட்டத்தில் அவ்வப்போது மின்திருட்டு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் மின்வாரியத்தினர்
Madurai Aadheenam and Nithyananthaநித்தியானந்தா நியமனத்தை எதிர்த்த வழக்கும், ஆதீனத்திற்கு எதிரான வழக்கும் தள்ளுபடி!

மதுரை: நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக நியமித்ததை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட பொது நலன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அதேபோல மதுரை ஆதீனத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரிய மனுவையும் உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்து விட்டது.இந்து மக்கள் கட்சி சார்பில் நித்தியானந்தாவுக்கு எதிரான மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், இந்து மக்கள் கட்சியின் மதுரை
Jayalalitha and Madurai Templeஇமெயிலில் ஜெயலலிதா, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

மதுரை: முதல்வர் ஜெயலலிதாவின் வீடு உள்ள போயஸ் கார்டன் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த இமெயிலை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கும் மிரட்டல் வந்துள்ளது.நேற்று இரவு 10 மணிக்கு மகாராஷ்டிராவில் இருந்து சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் ஒன்று வந்தது. அதில் மதுரை மீனாட்சி
தேவையில்லாம ஏன் தலையிடுறீங்க?.. ஜெயேந்திரருக்கு மதுரை ஆதீனம் கண்டிப்பு!

மதுரை: மதுரை ஆதீன விவகாரத்தில் ஜெயேந்திரர் தலையிடக் கூடாது. இது அவருக்குத் தேவையில்லாத ஒன்று என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.நித்தியானந்தாவுடன் இணைந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மதுரை ஆதீனம். அப்போது அவர் கூறுகையில், புதிய ஆதீனத்தை நியமிப்பது என்னுடைய உரிமை; இதை யாரும் விமர்சிக்க முடியாது. இது குறித்த ஜெயேந்திரரின் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது காஞ்சி சங்கராச்சாரியார்
மதுரையில் "வேன் குண்டு" வெடிக்கும்: சென்னைக்கு வந்த தகவலால் பரபரப்பு

சென்னை: மதுரையில் வேனில் வெடிகுண்டுகளுடன் தீவிரவாத கும்பல் ஒன்று சுற்றி வருவதாக சென்னை ஆம்புலன்ஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்த தொலைபேசி தகவலையடுத்து மதுரையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவையின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று மதுரையில் இருந்து பேசுவாதாகக் கூறிக் கொண்டு ஒரு நபர் பேசினார். "மதுரையில் ஏற்கெனவே சைக்கிள் குண்டு
More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next