ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம்
தமிழக செய்திகள்

Vijayakanthபுதுக்கோட்டை இடைத்தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் : விஜயகாந்த்

சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன் நிறுத்தப்படுவார் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமரன் எம்.எல்.ஏ. சாலை விபத்தில் காலமானார். இதைத் தொடர்ந்து ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான்
Jayalalitha and Sangmaஜனாதிபதி தேர்தல்: ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்ட பி.ஏ.சங்மா

சென்னை: முன்னாள லோக்சபா சபாநாயகரும் மூத்த தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பி.ஏ.சங்மா சென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆசைப்படும் சங்மா, ஜெயலலிதாவை சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் இணைந்து தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ஜெயலலிதா. இதற்காக ஒடிஸ்ஸா
Karunanidhiராசாவுக்கு திமுக முழுமையாக துணை நிற்கும்: கருணாநிதி

சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.கோபாலபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கேள்வி: 15 மாதங்களாக சிறையில் இருந்த ஆ.ராசாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?பதில்: மகிழ்ச்சி அடைகிறேன்.கேள்வி: ஜாமீனில் ராசா வெளியே வந்திருப்பது வழக்கை நீர்த்துப்
Jayalalithaராசா ஜாமீனில் விடுதலை: 2ஜி வழக்கு நீர்த்துப் போகும்.. ஜெயலலிதா

சென்னை: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் 2ஜி வழக்கு நீர்த்துப் போகும் போலத் தெரிவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். போயஸ் கார்டனில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி,கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆ.ராசா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளாரே?பதில்: நீங்கள் சொல்லித்தான் இதை நான் கேள்விப்படுகிறேன். ஆனால், 2ஜி
நித்யானந்தாவை நீக்கக் கோரி கலெக்டர் சகாயத்திடம் மனு: நடவடிக்கை எடுப்பதாக உறுதி

மதுரை: மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள நித்யானந்தாவை நீக்கக் கோரி மதுரை கலெக்டர் சகாயத்திடம் மதுரை ஆதீன மீட்புக்குழுவினர் புகார் மனு கொடுத்துள்ளனர். மதுரை ஆதீன மீட்புக்குழு பாரதீய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன், மதுரை மீனாட்சி பிள்ளைகளின் அமைப்பு தலைவர் ஜெகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.அந்த மனுவில்
Jayendrarரஞ்சிதாவுக்கு நான் தூதுவிடவில்லை: ஜெயேந்திரர்

காஞ்சி: ரஞ்சிதா தன் மீது தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெறுமாறு தான் யாரையும் தூதுவிடவில்லை என்று காஞ்சி ஜெயேந்திரர் தெரிவித்துள்ளார். நித்யானந்தா மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றதற்கு காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் எதிர்ப்பு தெரிவித்தார்.ரஞ்சிதா என்ற பெண்ணை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொண்டு சுற்றும் நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது என்று ஜெயேந்திரர்
Nithyananthaமதுரை ஆதீனத்தில் திருநங்கைகளுக்கு முக்கிய பொறுப்பு: நித்யானந்தா

மதுரை:  மதுரை ஆதீன மடத்தில் திருநங்கைகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று இளைய ஆதீனம் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,40 இந்து அமைப்புகளை உள்ளடக்கி மதுரை ஆதீன பாதுகாப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. எந்தவித ஆதாரமும் இன்றி ஆதீனம் பற்றி அவதூறு கூறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆதீன மடத்தில் திருநங்கைகளுக்கு முக்கிய பொறுப்பு
Madurai Adheenamநான் முடிவு எடுத்தது, எடுத்தது தான்: மதுரை ஆதீனம் பிடிவாதம்!

மதுரை: மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததில் எந்தவித மாற்றமும் இல்லை என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதகர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி வருமாறு, மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்யானந்தா பொறுப்பேற்றுள்ளார். அவரை எதிர்க்கவும், சைவ சமயத்திற்கு கேடு விளைவிக்கவும் ஒரு சிலர் தங்களை எதிர்ப்பாளர்கள் என்றும், மதுரை ஆதீன மீட்புக்குழு என்றும்
இனி சாதிக் கட்சிகளுடன் மட்டும் தான் கூட்டணி: ராமதாஸ்

வேலூர்: தமிழகத்தின் இனி வரும் தேர்தல்களில் சாதிக் கட்சிகளுடன்தான் கூட்டணி அமைப்போம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.வேலூர் மாவட்டம் ஏலகிரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:சமச்சீர் கல்வியால் உருப்படியாக பயன் இல்லை. தமிழ்நாட்டில் கல்வி கட்டணம் கூடுதலாக வசூலிக்கின்றனர். பொறியியல் படிப்புக்கான கட்டணத்துக்கு சமமாக இருக்கிறது பிரீகேஜி கட்டணம்.நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில்தான் பாமக
Jayalalithaஇந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்ள மானியம்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய புனித இடங்களுக்கு யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு தமிழக அரசு பயணச் செலவுக்கு மானியம் வழங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் அவர் தாக்கல் செய்த அறிக்கையில்,"ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் இறைவனை காணும் பணி மேற்கொள்வோம்' என அனைத்து
நெல்லை மாவட்டத்தில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரம்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்தவும், அதனை பரப்பும் கொசுக்களை அடியோடு ஒழிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர் பகுதிகளில் தொடங்கி மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் பாளையங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று
தாராபுரத்தில் அதிர்ச்சியில் உறைய வைத்த காலாவதி பால்பவுடர் டின்கள்

தாராபுரம்: தாராபுரத்தில் மருந்துக் கடை ஒன்றில் ஏராளமான காலாவதியான பால்பவுடர் டின்கள் விற்பனை செய்யப்பட்டதை பொதுமக்களே கண்டுபிடித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.தாராபுரத்தைச் சேர்ந்த மணிண்டனின் மனைவி லோகேஸ்வரி தமது குழந்தைக்காக பால்பவுடர் டின் ஒன்றை மருந்துக் கடையில் வாங்கியுள்ளார். அந்த பால்பவுடரை தமது குழந்தை அஸ்வினிக்குக் கொடுத்துள்ளார். அதைக் குடித்த குழந்தை சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து
போலீஸ் மீது செருப்பு வீசிய நித்யானந்தா சீடர்கள் மீது வழக்கு

மதுரை: மதுரை ஆதீன மடத்திற்கு முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக நித்யானந்தா சீடர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நித்யானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நியமித்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்நிலையில் ஆதீன மீட்புக் குழுவினர் தடையை மீறி மடத்திற்குள் சென்று வழிபடப்போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம்
Kaduvetti Guruகலப்பு திருமணம் செஞ்சா வெட்டி தள்ளுங்க...: காடுவெட்டி குரு பேச்சுக்கு எதிராக வழக்கு

சென்னை: கலப்புத் திருமணம் செய்வோரை வெட்டித் தள்ளுங்க என்று பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த வாராகி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழக அரசு கலப்பு திருமணத்தை ஆதரித்து சட்டம் இயற்றியுள்ளது. இந்திய அரசியல் அமைப்பு
பிளஸ் 2 மாணவர்களுக்கு அக்டோபருக்குள் லேப்டாப் விநியோகம்

சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் வரும் அக்டோபர் மாதத்துக்குள் அரசின் இலவச லேப்டாப் வழங்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் என மொத்தம் 9 லட்சம் பேருக்கு இலவச லேப்-டாப்புகள் வழங்கப்படும்
More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next