For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''வேலூரை வெல்கிறது முஸ்லீம் லீக்... புதிய நீதிக் கட்சிக்கு 3வது இடமே''

|

வேலூர் : வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெல்லும் நிலையில் உள்ளதாக நக்கீரன் சர்வே கூறுகிறது.

இங்கு அதிமுக 2வது இடத்தைப் பிடிக்கிறது.

பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் புதியநீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் 3வது இடத்திலேயே இருக்கிறார்.

IUML may win Vellore, says Nakkeeran

இஸ்லாமியர்கள் வாக்கு முஸ்லீம் லீக்குக்கே

வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம் பட்டு போன்ற பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் அதிகம். முழுக்க முழுக்க இஸ்லாமியர்களால் நடத்தப்படும் இந்தத் தொழிற்சாலைகளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கின்றனர். எனவே தொழிற்சாலை நிர்வாகங்கள் மூலம் இவர்களின் வாக்குகளை லீக், ஓரளவு திசை திருப்பி இருப்பதை உணரமுடிந்தது.

ஜமாத்துகள் மூலம் வாக்குகள் திருப்பம்

குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு என இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பல பகுதிகளிலும் ஜமாத்துகள் மூலம் வாக்குகளை சரிக்கட்டி விட்டது முஸ்லீம் லீக்.

ஜமாத் சொல்வதே வேதவாக்கு

ஆம்பூரைச் சேர்ந்த அப்துல்கபூர், சுனைனா பேகம் தம்பதிகள் "எங்க இஸ்லாமியர்களுக்கு கட்சியெல்லாம் இரண்டாம் பட்சம். ஜமாத் சொல்வதே வேத வாக்கு'''என்கிறார்கள் அழுத்தமாய்.

முதலியார்கள் ஏ.சி.சண்முகத்திற்கு

தி.மு.க.வில் இருக்கும் முதலியார் ஓட்டுக்களில் சிறு பகுதி ஜாதி பாசத்தின் அடிப்படையில் ஏ.சி.எஸ். பக்கம் சாய்கிறது. இதனால்தான் பள்ளிகொண்டாவைச் சேர்ந்த திமுகவைச் சேர்ந்த சாமிநாதன் "எம்.பி.யா இருக்கும் பாய் என்ன செஞ்சார்? அதனால் எங்க ஏ.சி.எஸ்.சுக்கு இந்தமுறை போடலாம்னு இருக்கேன்'''என்கிறார்.

முதலிடத்தில் முஸ்லீம் லீக்

தற்போதைய நிலவரப்படி முஸ்லீம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு 218 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2வது இடத்தில் அதிமுக

அதிமுக வேட்பாளர் செங்குட்டுவன் 2வது இடத்தில் இருக்கிறார்.

3வது இடத்தில் புதிய நீதிக் கட்சி

புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகத்திற்கு 106 பேரின் ஆதரவு கிடைத்துள்ளது.

4வது இடத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சிக்கு 22 பேரின ஆதரவே கிடைத்து 4வது இடத்தில் உள்ளது.

English summary
Nakkeeran survey has predicted that Vellore sitting MP Adul Rahman may win the poll again .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X