For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜேட்லி புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு கேடு: ட்விட்டரில் கல கல....

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய பட்ஜெட்டில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான வரி ஒரேயடியாக உயர்த்தப்பட்டுள்ளது பற்றி ட்விட்டரில் சிலர் காமெடியாக கருத்து தெரிவித்துள்ளனர்.

2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான சுங்க வரி 11 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பலர் ட்விட்டரில் சிகரெட்டின் விலை உயர்வு குறித்து காமெடியாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

உமர் அப்துல்லா

சிகரெட் மீதான வரி 72 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி மக்கள் தங்கத்திற்கு பதில் சிகரெட்டால் ஆன ஆபரணங்களை அணிவார்கள் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார்.

ஜேட்லி

புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்பது பழையமொழி. ஜேட்லி புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு கேடு என்பது புதியமொழி என ஜுன்ஜுன்வாலா என்பவர் தெரிவித்துள்ளார்.

ஏழை

புகையிலை விலை உயர்கிறது என்றால் பாலிவுட் இனிமேல் கவனமாக இருக்க வேண்டும். பீடி, சிகரெட் பிடிப்பவரை தெருவில் சுற்றும் ஏழை என்று கூற முடியாது என ஒருவர் தெரிவித்துள்ளார்.

வியாபாரம்

சிகரெட்/மது/புகையிலை ஃபிளேவர் டியோடரன்ட் அல்லது ஆணுறை வியாபாரத்தை துவங்குவது தான் சிறந்தது. இதற்காக எனக்கு ரூ.100 கோடி ஒதுக்குங்கள் என ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

நாடு

நாட்டின் நலனுக்காக நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்வது தான் சிறந்தது என்று நினைக்கிறேன் என ரமேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.

சிகரெட்

சிகரெட் கடைகள் முன்பு எழுதப்பட்டுள்ள வரிகள், கடையில் இருந்து சிகரெட்கள் வெளியே செல்கின்றன. நன்றி பட்ஜெட் 2014 என ரவீந்தர் சிங் ட்வீட் செய்துள்ளார்.

பர்ஸ்

இனி சிகரெட் பாக்கெட்டுகளில் அழுகிய நுரையீரலுக்கு பதிலாக காலியான பர்ஸுகளின் போட்டோக்களை போடலாம் என ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கடன்கள்

2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பார்த்த பிறகு வங்கிகள் சிகரெட் கடன்கள் அளிக்க உள்ளன என்று விக்னேஷ் ஐய்யர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு

காரில் ஒரு பாக்கெட் சிகரெட் உள்ளது. அதனால் அதை பாதுகாக்க இரண்டு பாதுகாவலர்களை அனுப்பியுள்ளேன் என ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி

சிகரெட் மீதான சுங்க வரி 11ல் இருந்து 72 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் இனி புகைப்பிடிப்பவர்கள் புற்றுநோயால் அல்ல அதிர்ச்சியால் இறந்து போவார்கள் என ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

வங்கி லாக்கர்

2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் தாக்குதல் திருடர்கள் வங்கி லாக்கரில் சிகரெட் பாக்கெட்டை பார்த்துள்ளனர் என அபூர்வா என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

English summary
Above are some funny tweets by citizens after FM Jaitley increased the excise tax on cigarette from 11 to 72%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X