For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு: ஜூன் 7ல் சரத்குமார் உண்ணாவிரதம்… தலைவர்களுக்கு அழைப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளதை எதிர்த்து மதுரையில் ஜூன் 7-ந்தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த அறவழி ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டி ‘‘ஜல்லிக்கட்டு'' வீர விளையாட்டு நிகழ்ச்சி நடத்தும் தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

Jallikattu Ban: Sarathkumar to hunger strike on June 7

அந்த கடித விபரம் வருமாறு:

‘‘தமிழர்களின் வீர விளையாட்டிற்கு இலக்கணமாய்த் திகழ்ந்த ‘‘ஜல்லிக்கட்டு'' நிகழ்ச்சி உச்சநீதிமனற் உத்தரவுப்படி, தற்போது தடை செய்யப்பட்டுள்ளதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

உச்சநீதிமன்றம் தடை விதித்தவுடன் ‘‘ஜல்லிக்கட்டு'' மற்றும் மாட்டு வண்டிப் பந்தயம் இனிமேல் நடக்காது போய் விடுமோ என்ற கவலையும், வேதனையும் தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நாம் ஒன்றுபட்டு முயற்சிகளைப் படிப்படியாக மேற்கொண்டு இந்தத் தடையை நீக்குவதற்கு, ஜனநாயக வழியில் அறவழியில் குரல் கொடுக்க முடியும்.

தமிழக மக்களின் உரிமையை, உணர்வை என்றென்றும் பாதுகாக்கக் கூடிய முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி மேல்முறையீடு மனு செய்திருக்கிறார். இதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வோம்.

அந்த மனு மீதான விசாரணைக்குப்பின் நல்ல முடிவு வரும் என்று நம்பிக்கையோடு இருப்போம். அதற்கு உறுதுணையாக வீர விளையாட்டிற்கு ஆதரவாக உள்ள மக்கள், இளைஞர்கள், காளை வளர்ப்போர் மற்றும் ‘‘ஜல்லிக்கட்டு'' ஆர்வலர்களின் ஒன்றுபட்ட குரலை எதிரொலிக்கச் செய்யும் வகையிலும், முதல்வரின் முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலும் 7-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை, பழங்காநத்தம், ஜெயம் தியேட்டர் எதிரே அமைக்கப்படும் பந்தலில், நடைபெறும் அறப்போர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, உங்கள் தலைமையில், தங்கள் பகுதியில் உள்ள மக்களை ஒன்று திரட்டி, அணி திரண்டு அழைத்து வர வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நம் தமிழ் இனத்தின் எழுச்சியை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உண்ணாவிரத நிகழ்ச்சி அமைந்திட வேண்டும். அதற்கு தங்கள் ஒத்துழைப்பு மிக மிக முக்கியம்.

எனது தலைமையில் நடைபெறும் இந்த உண்ணா விரதப் போராட்டத்திற்கு, ‘‘ஜல்லிக்கட்டு'' வீர விளையாட்டு தொடர்ந்து நடைபெறுவதற்காக, முனைப்போடு பாடுபட்டுவரும் முக்கியத் தலைவர்கள் முன்னிலையில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திவரும் கிராமங்களில் உள்ள அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழ் இனத்தின் உரிமைக்காக நடத்தப்படும் இந்த உண்ணாவிரத போராட்டம், வெற்றிபெற வேண்டும். அதன் மூலம் பாரம்பரியமிக்க தமிழக வீர விளையாட்டு, தலைமுறைகளைத் தாண்டி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
AISMK leader Sarathkumar to hunger strike protest on June 7th on Madurai for against Supreme court verdict in ban on jallikattu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X