For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் சிறையில் ஜெயலலிதா: சனிக்கிழமையில் இருந்து இதுவரை நடந்தது என்ன?

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததில் இருந்து இன்று வரை நடந்தவற்றை பார்ப்போம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதா பரப்பன அக்ரஹாராவில் உள்ள விவிஐபி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Jaya in jail: What does happen from saturday till today?

அவர் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து பரப்பன அக்ரஹாரா பரபரப்பாகவே உள்ளது.

  • தீர்ப்பை அறிவித்ததும் ஜெயலலிதாவுக்கு மயக்கம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
  • ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனதுடன், எம்.எல்.ஏ. பதவியும் போனது.
  • ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததும் அங்கு கூடியிருந்த அமைச்சர்கள், அதிமுகவினர் ஆகியோர் கண்ணீர் விட்டனர். சிலர் தரையில் படுத்து அழுது புரண்டனர்.
  • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. அதிமுகவினர் பேருந்துகளை கல்வீசித் தாக்கினர், எரித்தனர், கடைகளை வலுக்கட்டாயமாக மூட வைத்தனர்.
  • ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்த விவரம் அறிந்து அதிர்ச்சியிலும், தற்கொலை செய்தும் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர்.
  • சிறையில் அடைக்கப்பட்ட அன்று இரவு ஜெயலலிதா வெகுநேரம் தூங்காமல் சிந்தனையில் இருக்க, சிறைக்கு வெளியே ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கண்ணீரும், கம்பலையுமாக இரவை கழித்தனர்.
  • ஜெயலலிதா சனிக்கிழமை இரவும், மறுநாள் காலையும் பன்னீர் செல்வம் அடையாறு ஆனந்த பவனில் இருந்து வாங்கி வந்த உணவை சாப்பிட்டார்.
  • ஞாயிற்றுக்கிழமை காலை 3.30 மணிக்கே ஜெயலலிதா எழுந்துவிட்டார். தனது அறைக்குள் அங்கும் இங்குமாக சிறிது நேரம் நடந்துள்ளார்.
  • காலையில் தமிழ், ஆங்கிலம் என 2 மொழி செய்தித்தாள்களை வாசித்துள்ளார்.
  • ஞாயிற்றுக்கிழமை மதியம் சென்னையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
  • திங்கட்கிழமை ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் அழுதபடியே பதவியேற்றுக் கொண்டனர்.
  • ஜெயலலிதாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • திங்கட்கிழமை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
  • செவ்வாய்க்கிழமை மனு விசாரணைக்கு வந்தது. ஆனால் அரசு வழக்கறிஞர் யார் என்ற குழப்பத்தால் மனு மீதான விசாரணை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அன்றைய தினமே ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

English summary
Parappana Agrahara looks busy all the time after Jayalaithaa is lodged there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X