For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்த் குடும்ப அரசியல் நடத்துகிறார்: நடிகை விந்தியா தாக்கு

By Siva
|

சென்னை: ஜெயலிதாவை எதிர்த்து யாராலும் அரசியல் செய்ய முடியாது என்று நடிகை விந்தியா தெரிவித்துள்ளார். மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்ப அரசியல் நடத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் ஸ்டார் பேச்சாளர்களில் ஒருவராக உள்ளவர் நடிகை விந்தியா. அவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில் அவர் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் பேசியபோது கூறுகையில்,

விஜயகாந்த்

விஜயகாந்த்

விஜயகாந்த் மக்களுக்காக ஒன்றும் கட்சி நடத்தவில்லை. அவரது மனைவி பெயரில் சொத்து சேர்க்க, மச்சானுக்கு பதவி வாங்கிக் கொடுக்க தான் முனைப்பாக உள்ளார்.

டாஸ்மாக்

டாஸ்மாக்

பிரச்சாரக் கூட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசுகிறார். முதலில் அவர் கணவர் குடிக்காமல் வந்து பேசட்டும்.

கருணாநிதி

கருணாநிதி

2ஜி ஊழல், நாளிதழ் எரிப்பு சம்பவம் பற்றியும், கனிமொழி, குஷ்பு ஆகியோர் பற்றியும் தாத்தா கருணாநிதியுடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

விஜயகாந்த் சட்டசபையில் கோபமாக பேசியதால் தான் 5 எம்.எல்.ஏ.க்களை இழந்து நின்றார். ஜெயலலிதாவை எதிர்த்து யாராலும் அரசியல் செய்ய முடியாது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

தமிழகத்திற்கு மின்சாரம் வழங்காமல் காங்கிரஸ் அரசு நம் மாநிலத்தை புறக்கணித்தது. தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் அரசை துரத்திவிட வேண்டும் என்றார் விந்தியா.

English summary
Actress Vindhya told that none can survive in politics if they are not in good terms with CM Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X