For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா.. நீக்கம் தொடங்கியது... அரசின் இணையதளத்திலிருந்து ஜெ. படம் நீக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் இணையதளங்களில் இதுவரை முதல்வர் ஜெயலலிதா என்று இடம் பெற்றிருந்த புகைப்படங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் ஓ.பன்னீர் செல்வத்தின் படம் இடம் பெறத் தொடங்கியுள்ளது.

தமிழக அரசு இணையதளத்தில் (http://www.tn.gov.in/) நேற்று வரை ஜெயலலிதாவின் படம் போட்டு அவர்தான் முதல்வர் என்றும் பழைய தகவலே இடம் பெற்றிருந்தது.

தற்போது புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன.

புகைப்படங்கள் நீக்கம்

புகைப்படங்கள் நீக்கம்

அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தப் படங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, அவர் கலந்து கொண்ட விழாக்களின் புகைப்படங்கள் போன்றவை இணையதளத்தின் பிரதான பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தன.

பறி போன பதவி

பறி போன பதவி

தற்போது ஜெயலலிதாவுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதால், அவர் பதவி இழக்க நேரிட்டுள்ளது. எனவே அரசு இணையதளத்திலும் அவர் இடம் பெற்றிருந்த புகைப்படங்களும் நீக்கப்பட்டு, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்கள் போடப்பட்டுள்ளன.

எம்.எல்.ஏ பட்டியிலிருந்தும் ஜெ. பெயர் நீக்கம்

எம்.எல்.ஏ பட்டியிலிருந்தும் ஜெ. பெயர் நீக்கம்

அதேபோல எம்.எல்.ஏக்கள் பெயர்ப் பட்டியலிலிருந்தும் ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

10 வருட தடை

10 வருட தடை

4 ஆண்டு சிறைத் தண்டனையைத் தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ. பதவியும் பறி போய் விட்டது. அவரால் தற்போதைய நிலையில் 10 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவைப் பட்டியலும் மாற்றம்

அமைச்சரவைப் பட்டியலும் மாற்றம்

மேலும் அமைச்சரவைப் பட்டியலும் மாற்றப்பட்டு புதிய அமைச்சர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன. அனைவருமே ஏற்கனவே இருந்தவர்கள்தான். அதில் ஒரே ஒரு மாற்றமாக முதல்வரின் பெயரும், படமும் மட்டும் மாறியுள்ளது.

நம்பர் டூ அமைச்சரான விஸ்வநாதன்

நம்பர் டூ அமைச்சரான விஸ்வநாதன்

இதுவரை ஜெயலலிதா அமைச்சரவையில் நம்பர் டூ அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். தற்போது அவரது அமைச்சரவையில் நம்பர் டூவாக நத்தம் விஸ்வநாதன் மாறியுள்ளார்.

ஆனா இதெல்லாம் மாறலையே

ஆனா இதெல்லாம் மாறலையே

அதேசமயம், அம்மா உணவகத்தை ஜெயலலி தொடங்கி வைத்தது தொடர்பான புகைப்படமும், செய்தியும் முதல் பக்கத்தில் தொடர்ந்து இருக்கிறது.

English summary
Former Chief Minister Jayalalitha's photos have been removed from TN Govt site.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X