For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 சென்னை... 15 இடங்களில்.. ஜெ. புயல் வேகப் பிரசாரம்!

|

சென்னை: சென்னையின் மூன்று தொகுதிகளிலும் 15 இடங்களில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்து பேசவுள்ளார்.

இதுதொடர்பாக திருத்தப்பட்ட முதல்வரின் சுற்றுப்பயணத் திட்டத்தை அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வருகின்ற 24-ந்தேதி அன்று நடைபெற உள்ளது.

Jaya to storm Chennai for 3 days

இதை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, கடந்த 3.3.2014 முதல் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத் திட்டத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி-தருமபுரி தொகுதிகளில் நாளை மறுநாள் (17-ந்தேதி) 2 இடங்களில் பேசுகிறார்.

கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட பூசாரிப்பட்டி கூட்டு ரோடு, வரட்டனம்பள்ளி மெயின் ரோடு பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

பிறகு தருமபுரி தொகுதிக்குட்பட்ட பென்னாகரம் சாலை, மேம்பாலம் அருகில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

சென்னையில் 3 நாட்கள்

சென்னையில் 19, 20, 21-ந்தேதிகளில் 3 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் செல்லும் இடங்கள் வருமாறு:

போயஸ் கார்டன், கோட்டூர்புரம், மீனம்பாக்கம், ஏ.எம்.ஜெயின் காலேஜ் சுரங்கப் பாதை

1. எம்.ஜி.ஆர். சிலை அருகில் (நங்கநல்லூர்), (பேசும் இடம்), 4-ஆவது பிரதான சாலை
2. ஆலந்தூர் தாலுகா அலுவலகம் (பழவந்தாங்கல்), (பேசும் இடம்), தில்லை கங்கா நகர்
3. ஆலந்தூர் நீதிமன்றம் அருகில் (பேசும் இடம்) கிண்டி, அசோக் பில்லர், எம்.எம்.டி.ஏ. காலனி மெயின் ரோடு

4. ரசாக் கார்டன் சந்திப்பு (பேசும் இடம்), பூவிருந்தவல்லி சாலை, நியூ ஆவடி சாலை, அயனாவரம் சாலை, கெல்லீஸ் பாலம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை மேம்பாலம், சூளை நெடுஞ்சாலை

5. சூளை தபால் நிலையம் (பேசும் இடம்) சைடன் ஆம்ஸ் சாலை, யானை கவுனி பாலம்

6. வால்டாக்ஸ் சாலை சந்திப்பு (பேசும் இடம்), பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, சென்ட்ரல், அண்ணா சிலை, வாலாஜா சாலை

7. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பு (பேசும் இடம்), நடேசன் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, போயஸ் கார்டன்

வட சென்னை

1. திருவொற்றியூர் தேரடி (பேசும் இடம்) டோல்கேட், தண்டையார் பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலை

2. மணலி நெடுஞ்சாலை சந்திப்பு (பேசும் இடம்), கிருஷ்ணமூர்த்தி இணைப்புச் சாலை

3. சத்தியமூர்த்தி நகர், (பேசும் இடம்), எம்.கே.பி.நகர், மத்திய நிழற்சாலை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, மூர்த்திங்கர் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை

4. பெரவள்ளூர் சந்திப்பு (பேசும் இடம்), பெரம்பூர் நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, போயஸ் கார்டன்

தென் சென்னை

போயஸ் கார்டன், காந்தி சிலை, சாந்தோம் நெடுஞ்சாலை, எல்.பி.ரோடு

1. கந்தன்சாவடி காளியம்மன் கோயில் பஸ் ஸ்டாப் (பெருங்குடி), (பேசும் இடம்), டைடல் பார்க், வேளச்சேரி ரோடு, பனகல் மாளிகை

2. ஐந்து விளக்கு (பேசும் இடம்) ஜோன்ஸ் ரோடு, கே.கே. நகர்

3. எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் (100 அடி ரோடு) (பேசும் இடம்) உதயம் தியேட்டர், அரங்கநாதன் சுரங்கப் பாலம், நியூ போக் ரோடு, முத்துரங்கன் சாலை

4. தியாகராயநகர் பேருந்து நிலையம் (பேசும் இடம்) தேவர் சிலை, டி.டி.கே. சாலை, போயஸ் கார்டன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Chief Minister Jayalalitha will campaign in Chennai for 3 days from 18 to 20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X