For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் 4 அம்மா உணவகங்கள் திறப்பு.. உணவை ருசி பார்த்தார்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மேலும் 4 அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

திருவல்லிக்கேணி அரசினர் கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் அம்மா உணவகத்தைத் தொடங்கி வைத்த முதல்வர், கையோடு சாப்பாட்டையும் ருசி பார்த்துப் பாராட்டினார்.

Jayalalithaa inaugurates 4 more ‘Amma’ canteens in Chennai

இதுதவிர இன்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனை மற்றும் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை ஆகியவற்றிலும் அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இந்த உணவகங்களையும் சேர்த்து தற்போது சென்னையில் மொத்தம் 207 அம்மா உணவகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் இட்லி, பொங்கல், எலுமிச்சம்பழ சாதம், பூரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chief Minister Jayalalithaa declared open four more “Amma Unavgam”s (low-cost canteen) in Chennai on Monday. She visited the Government Kasturba Gandhi Hospital, Triplicane, to inaugurate one of the new canteens. The other three are at the government hospitals in Royapettah and Kilpauk, besides the Government R.S.R.M. Hospital in Royapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X