For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தல்: பாஜகவுக்கு முதலிடம் - திமுகவுக்கு 3வது இடம்தானாம்: ஜூ.வி. சர்வே

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஜூனியர் விகடன் வாரமிருமுறை நடத்திய சர்வேயில் தமிழகத்தில் பாஜக அணிதான் அதிக இடங்களைக் கைப்பற்றுமாம். அதிமுகவுக்கு 2வது இடமும் திமுகவுக்கு 3வது இடமும்தான் கிடைக்கும் என்கிறது.

லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் இதுவரை வெளியாகி உள்ளன. தேசிய அளவிலான ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்புகள் இடங்களில் வித்தியாசம் இருந்த போதும் அதிமுகவுக்கு அதிகம், திமுகவுக்கு 2வது இடம்தான் என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் பாஜக அணிக்கு மிக அதிகபட்சம் 3 தொகுதிகள் கிடைக்கலாம் என்றும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஜூனியர் விகடன் சர்வேயோ தலைகீழாக பாஜகவுக்குத்தான் அதிக பேர் வாக்களிக்க விரும்புவதாக சொல்கிறது.

ஜூனியர் விகடன் தமிழகம் முழுவதும் 25,247 பேரிடம் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள்:

பாஜக அணிக்கு 29%

பாஜக அணிக்கு 29%

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 7,259 பேர் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். அதாவது 28.75% பேர் பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று கூறியுள்ளனராம்.

அதிமுகவுக்கு 26%

அதிமுகவுக்கு 26%

அதற்கு அடுத்ததாக அதிமுகவுக்கு 6,666 பேர் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். அதாவது 26.40% பேர் அதிமுகவுக்கு வாக்களிப்பவர்களாம்.

திமுகவுக்கு 17.51%

திமுகவுக்கு 17.51%

3வது இடம்தான் திமுகவுக்காம்.. மொத்தம் 25,247 பேரில் 4,4,20 பேர்தான் திமுகவை ஆதரிப்பவர்களாம். அதாவது 17.51% பேர் மட்டுமே திமுகவுக்கு ஆதரவாம்.

நோட்டாவுக்கு 4வது இடம்

நோட்டாவுக்கு 4வது இடம்

இதற்கு அடுத்ததாக நோட்டாவை 2030 பேர் தேர்ந்தெடுத்துள்ளனர். மொத்தம் 8.04% பேர் நோட்டாவை தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

5வது இடம் ஆம் ஆத்மிக்கு

5வது இடம் ஆம் ஆத்மிக்கு

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை 1,009 பேர் ஆதரிக்கிறார்கள். 3.99% பேர் ஆம் ஆத்மிக்கு ஆதரவாம்.

6வது இடம்தான் இடதுசாரிகளுக்கு

6வது இடம்தான் இடதுசாரிகளுக்கு

அதற்குப் பின்னர் இடதுசாரிகளுக்கு 770 பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இது 3.05% என்கிறது ஜூனியர் விகடன் சர்வே

இடதுசாரிகளுக்கு 3.05%

இடதுசாரிகளுக்கு 3.05%

இடதுசாரிகளுக்கு 770 பேர் ஆதரவாம். 3.05% பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

English summary
In Tamilnadu, the BJP may get Ist place, DMK will go to 3rd palce, According to Junior Vikatan Survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X