For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக மகளிர் அணி செயலாளர் ஆகிறார் கனிமொழி? கருணாநிதி ஆலோசனை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திராவிட முன்னேற்றக்கழகத்தின் மகளிர் அணிச் செயலாளர் ஆக கனிமொழியை நியமித்து அந்த அணிக்கு புத்துயிர் ஊட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரிடம் தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Kani may be appointed DMK women’s wing organizer?

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக கடந்த 25 ஆண்டுகாலமாக கோலோச்சி வருகிறார் ஜெயலலிதா. இதேபோல பிரதான கட்சியான தே.மு.தி.க.வில் பிரேமலதாவும், பா.ஜ.கவில் மாநில தலைவராக தமிழிசை சவுந்தரராஜனும் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதேபோல தமிழகத்தில் பாஜகவில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் கட்சியில் ஜோதிமணி, குஷ்பு போன்றவர்கள் கட்சிப் பொறுப்பில் இருப்பதோடு ஊடகங்களில் மல்லுக்கட்டுவதோடு, தங்களின் கட்சியை மகளிர் மத்தியில் கொண்டு செல்கின்றனர்.

இதே போல, தி.மு.க.,விலும் ராஜ்யசபா எம்.பியாக உள்ள கனிமொழிக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. திமுகவை மகளிர் மத்தியில் வேகமாக எடுத்து செல்ல வேண்டும் எனில் தி.மு.க., வில் பெயரளவிற்கு மட்டுமே இருக்கும் மகளிர் அணிக்கு, மாநில செயலர் ஆக கனிமொழியை நியமிக்க வேண்டும் என, தலைவர் கருணாநிதியிடம், கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளதாகவும், கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளில் செயல்படுவது போல, வேகமாக செயல்படாமல் திமுக மகளிர் அணி இருக்க காரணம், அந்த அணிக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

இதனாலேயே, கட்சியை, மகளிர் வாக்களர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியில், பெரும் தொய்வு இருப்பதை, கட்சியினர் வெகுவாக உணர்ந்திருக்கின்றனர். கட்சி மறுசீரமைப்பு குழுவினர் உட்பட கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் பலரும், இதை கட்சியின் தலைவர் கருணாநிதியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதனால், கட்சியின் மகளிர் அணிக்கு, தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமித்து, அந்த அணியை உயிரோட்டம் உள்ளதாக ஆக்க, முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அந்த அணியின் மாநில செயலராக, மகளிர் முன்னேற்ற விஷயங்களில் ஈடுபாடு உள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என, கருணாநிதி விரும்புவதாகவும் தெரிகிறது.

ஜெயலலிதா, பிரேமலதா, தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் போன்றோர், அ.தி.மு.க., - தே.மு.தி.க., பா.ஜ.க போன்ற கட்சிகளில் பிரசார பீரங்கிகளாக செயல்பட்டு, கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுகின்றனர். எனவே மகளிர் அணியின் மாநில செயலராக கனிமொழியை நியமிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை எழுப்பவே, அதுகுறித்து தீவிர ஆலோசனையில், கருணாநிதி இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் மற்றும் பொருளாளர் ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மகளிரின் மத்தியில் திமுகவை கொண்டு செல்வதற்கும், தென் தமிழகத்தில், கட்சியின் ஓட்டு வங்கியை அதிகரிப்பதற்கும் கனிமொழி சாதகமாக இருந்து செயல்படுவார் என்றும் நினைப்பதால், விரைவில், மகளிர் அணி செயலர் பொறுப்பில் கனிமொழி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம் கனிமொழிக்கு மாணவர் அணி செயலர் பொறுப்பை கொடுத்து, முக்கியத்துவம் இல்லாமல் ஒதுக்கி விட்டு விடலாம் என, ஸ்டாலின் தரப்பில் ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறது.

மகளிர் அணியா?மாணவர் அணியா? எந்த அணி செயலாளராக கனிமொழி நியமிக்கப்படுவார் என்பது ஜனவரி 9ஆம் தேதிக்குப்பின்னர் தெரியவரும்.

English summary
DMK sources said, Rajya Sabha M.P.Kanimozhi may be appointed to women's wing Organizing Secretary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X