For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிரிகளே இல்லை என்றால் அது சர்வாதிகாரம்... என்று அர்த்தம் - கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் களத்தில் இன்று எதிரிகளையே காணவில்லை என்று கூறுகிறார் அதிமுக பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா. அப்படி என்றால் அங்கு சர்வாதிகாரம் கொடி கட்டிப் பறக்கிறது என்று பொருள். ஜனநாயகம் இல்லை என்று பொருள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளராக மீண்டும் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், அரசியல் களத்தில் இன்று அதிமுகவுக்கு எதிரிகளையே காண முடியவில்லை என்று கூறியிருந்தார்.

இதற்கு கருணாநிதி பதில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி பதில் பாணி அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எதிரிகளையே காணவில்லையே

எதிரிகளையே காணவில்லையே

கேள்வி: முதல்வர் ஜெயலலிதா அரசியல் களத்தில் இன்று எதிரிகளையே காணவில்லை என்று பேசியிருக்கிறாரே?

கருணாநிதி: அப்படியென்றால் அந்த அளவுக்கு இங்கே "சர்வாதிகாரம்" கொடி கட்டிப் பறக்கிறது என்றுதான் பொருள். எதிரிகளே இல்லை என்றால், அங்கே ஜனநாயகமும் இருக்காது.

அன்றாடம் திமுகவைத் தாக்குகிறார்களே....

அன்றாடம் திமுகவைத் தாக்குகிறார்களே....

கேள்வி: தி.மு.க தமிழகச் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகக் கூட இல்லை; ஆனாலும் சில நாளேடுகள் அன்றாடம் தி.மு.கவையும், குறிப்பாக உங்களையும் தாக்கிச் செய்திகளை வெளியிடுவதையே கடமையாகக் கருதி செய்திகளை வெளியிடுகிறார்களே?

கருணாநிதி: என்னைத் தாக்கி எழுதினால்தான், பெற வேண்டியவர்களிடமிருந்த அதற்குரிய சன்மானங்கள் கிடைக்கும். ஆளும் தரப்பினரைப் பற்றி எழுதினால் அவதூறு வழக்கு அல்லவா வரும்? ஒரு உதாரணம் கூறுகிறேன். பொதுவாக ஒரு நிகழ்ச்சி பற்றி விளம்பரம் கொடுக்கும்போது, நிகழ்ச்சி நடப்பதற்கு முதல் நாள் அவ்வாறு நிகழ்ச்சி நடைபெறப் போவதாகவும், அதிலே முதல்வர் கலந்து கொள்ளப் போவதாகவும் விளம்பரம் செய்வார்கள். ஆனால் 28-8-2014 அன்று காலையில் முதல்வர் சென்னை வெளி வட்டச் சாலை (முதல் கட்டம்) திறப்பு விழாவினை காணொலி காட்சி மூலம் நடத்தி வைத்தார். அதற்கான விளம்பரம் காலைப் பத்திரிகைகளிலே வெளிவந்தது. ஆனால் ஒரு மாலைப் பத்திரிகையில் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த பிறகு, அன்றையதினம் மாலையில் முதல்வர் அந்தச் சாலையினை திறந்து வைத்ததாக முழுப் பக்க அளவுக்கு விளம்பரம் வந்துள்ளது. அந்த நாளேடு ஆளுங்கட்சியையோ, முதல்வரையோ விமர்சிக்க முற்பட்டால், அந்த விளம்பரம் 3 கிடைத்திருக்குமா? அதனால்தான் இந்த நாளேடுகள் எல்லாம் என்னை விமர்சிக்கின்றன. பத்திரிகாதர்மம் என்னவாயிற்று என்று கேட்கிறீர்களா? அந்தத் தர்மம் எந்தக் கடையிலே கிடைக்கிறது?

"அம்மா"வுக்காக அவசரமாக

கேள்வி: சென்னை வெளி வட்டச் சாலைப் பணிகள் முடிவடையாத நிலையில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்ததாகக் கூறுகிறார்களே?

கருணாநிதி: உண்மைதான்! வண்டலூரில் இருந்து - மீஞ்சூர் வரையிலான, வெளி வட்டச் சாலையின் முதல் பகுதி, வண்டலூர் - நெமிலிச்சேரி வரை முடிக்கப்பட வேண்டும். ஆனால், இப்பாதையின், துவக்கமான வண்டலூரில், ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணி நிறைவு பெறவில்லை. எனவே மண்ணிவாக்கத்தில் இருந்து நெமிலிச்சேரி வரையிலான சாலை "அம்மா"வுக்காக அவசரமாக திறக்கப்பட்டுள்ளது.

ஜி.ராமகிருஷ்ணன் கட்டுரை

ஜி.ராமகிருஷ்ணன் கட்டுரை

கேள்வி: "தறி கெட்ட சட்டம் - ஒழுங்கு, கட்டுப்படுத்தாத தமிழக அரசு" என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரையைப் படித்தீர்களா?

கருணாநிதி: முழுவதும் படித்தேன்; சிறப்பாக எழுதியுள்ளார். தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றியும் அதிலே குறிப்பிட்டிருக்கிறார். இருந்தாலும் கட்டுரையின் தொடக்கத்தில், "தொழில் வளர்ச்சியில் தமிழகம் தேசிய சராசரியைவிட பின்தங்கியுள்ளது. விவசாய வளர்ச்சியில் கடந்த மூன்றாண்டுகளாக தேக்க நிலை நீடிக்கிறது. மாநில மக்கள் தொகையில் சுமார் 14 சதவிகிதம் பேர் (89 இலட்சம்) வேலை கேட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

சொல்லி மூன்றாண்டுகள்

சொல்லி மூன்றாண்டுகள்

சட்டம், ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்று சொல்லி மூன்றாண்டுகள் ஆகின்றன. ஆனால் முன்னேற்றம் ஏற்படவில்லை. அரசு நிர்வாகத்தில் முறைகேடு அங்கிங்கெனாதபடி நிறைந்துள்ளது. மணற்கொள்ளை தொடர்கிறது. பள்ளிக் கல்வி வேகமாக தனியார் மயமாகி வருகிறது. உயர் கல்வியின் பெரும் பகுதி தனியார் மயமாகி ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகி வருகிறது. மத்திய அரசு அமலாக்கி வரும் பொருளாதாரக் கொள்கையை மாநிலத்தில் அமலாக்குவதோடு மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கைகளுக்கு அ.தி.மு.க. அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது. சட்டமன்றத்தில் அரசை விமர்சித்தால் ஆளும்கட்சியினர் அனுமதிப்பதில்லை. மக்கள் மன்றத்தில் அரசின் தவறான கொள்கையை சுட்டிக்காட்டினால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவதூறு வழக்கு தொடுக்கிறார்கள்" என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பது, நடைபெறும் ஆட்சியைப் பற்றிய ஒட்டுமொத்தமான கருத்தினைப் உள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் அழைப்பு

மத்தியப் பிரதேசத்தின் அழைப்பு

கேள்வி: மத்தியப்பிரதேச மாநில முதல்வர் தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க வருமாறு, கோவை தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத் திருக்கிறாரே?

கருணாநிதி: கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ் நகரில் தொழில் துவங்க வருமாறு இதே கோவையில் கர்நாடக மாநில முதலமைச்சர் இந்த ஆண்டு துவக்கத்தில், ஜனவரி மாதத்தில் ஒரு நிகழ்ச்சியிலே அழைப்பு விடுத்து, அதுபற்றி 22-1-2014 தேதிய காலை நாளிதழில் "தள்ளி விடும் தமிழகம்; கவர்ந்திழுக்கும் கர்நாடகம் - கை நழுவிய 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு"என்ற தலைப்பிலே செய்தி வெளியிட்டிருந்தது.

ஜெயலலிதா கோபித்துக் கொண்டார்

ஜெயலலிதா கோபித்துக் கொண்டார்

இதைப்பற்றி அப்போது நான் கேள்வி எழுப்பிய போது, முதலமைச்சர் ஜெயலலிதா கடுமையாக கோபித்துக் கொண்டு என்னைத் தாக்கிப் பேசினார். தற்போது 28-8-2014 அன்று கோவை மாநகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான், மத்தியப் பிரதேச மாநில தொழில் துறை அமைச்சர் யசோதரா ராஜே ஆகியோர் கலந்து கொண்டு, தங்களது மாநிலத்தில் முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்களுக்கு எது தேவைப்படுகிறதோ அதைச் செய்து கொடுப்போம்; 20 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை வரையறுத்து வைத்துள்ளோம்; அதிலே தொழில் தொடங்கலாம்; 24 மணி நேரமும் மின்சாரம் கொடுக்கிறோம்; சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்குகிறது; அமைதியான மாநிலம்;

நேரில் வந்து கூப்பிடுகிறார்கள்

நேரில் வந்து கூப்பிடுகிறார்கள்

முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை தான் முதல்வர் அல்ல; முதன்மை செயல் அதிகாரியாகப் பணியாற்றுவேன்; ஒவ்வொரு திங்கள் கிழமையும் முதலீட்டாளர்கள் தன்னை முன் அனுமதியில்லாமல் சந்திக்கலாம் என்றெல்லாம் பேசியிருக்கிறார். ஏற்கனவே இது போலத்தான் கர்நாடக முதல்வர் கோவைக்கு வந்து தமிழகத் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். தற்போது மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் கோவைக்கு வருகை தந்து அழைப்புவிடுத்துள்ளார்.

ஆனால் நம் முதல்வரோ...

ஆனால் நம் முதல்வரோ...

ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா, காமராஜர் சாலையிலே உள்ள விவேகானந்தர் இல்லத்திலே உள்ள பண்பாட்டு மையத்தை, அதே காமராஜர் சாலையிலே உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து "காணொலி காட்சி" மூலமாகத் திறந்து வைக்கிறார்.

110 விதி அறிவிப்புகள்

110 விதி அறிவிப்புகள்

கேள்வி: 110வது விதியின் கீழ் முதல்வர் படித்த அறிவிப்புகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு விட்டனவா?

கருணாநிதி: ஒரு உதாரணம் கூறுகிறேன். முதல்வர் ஜெயலலிதா 8-9-2011 தேதியன்று பேரவை விதி 110இன் கீழ் படித்த அறிக்கையில், "சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமழிசை அருகே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் 311.05 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு முறையான அணுகு சாலை அமைப்பதற்குத் தேவைப்படும் 12.87 ஏக்கர் நிலம், நிலத்தின் உரிமையாளர்களிடம் உரிய கலந்தாலோசனை செய்து பெறப்படவுள்ளது.

மேற்கண்ட நிலம் பெறப்பட்ட பின், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 2,160 கோடி ரூபாய்ச் செலவில், 311.05 ஏக்கர் பரப்பளவில், செம்பரம்பாக்கம், குத்தாம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம் மற்றும் வெள்ளவேடு கிராமங்களை உள்ளடக்கிய "திருமழிசை துணைக்கோள் நகரம்" அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நகரத்தில் 12,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, பொருளா தாரத்தில் நலிந்த பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் ஆகியோர் எளிதில் வாங்கக் கூடிய விலையில் வழங்கப்படும்" என்று அறிவித்தார். அ.தி.மு.க.வினர் மேஜையைத் தட்டி வரவேற்றார்கள்.

அறிவித்து 3 ஆண்டுகள்

அறிவித்து 3 ஆண்டுகள்

முதல்வர் ஜெயலலிதா இந்த அறிவிப்பினைச் செய்து மூன்றாண்டுகள் முடியப் போகிறது. இந்தத் திட்டம் பற்றி இன்றையதினம் வெளிவந்திருக்கிற செய்தி என்ன தெரியுமா? விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கலால், திருமழிசையில் துணை நகரம் அமைக்கும் திட்டத்தை, பகுதி பகுதியாக செயல்படுத்த முடிவெடுத்து, அதற்கான பணிகளை வீட்டு வசதி வாரியம் துவங்கியுள்ளது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இத்திட்டத்தில் 12 ஆயிரம் வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காகத் தேர்வு செய்யப்பட்ட நிலங்களில் பெரும்பாலானவை, விவசாய நிலங்களாக இருப்பதால், இந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 138 ஏக்கர் நிலத்தில் 9,700 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படும். அடுத்த சில மாதங்களில் இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் பணிகள் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அப்படியென்றால் அறிவித்தது தவறான செய்தியா?

அப்படியென்றால் அறிவித்தது தவறான செய்தியா?

அப்படியென்றால் முதல்வர் சட்டசபையில், 311 ஏக்கர் நிலம் வீட்டு வசதி வாரியத்திடம் உள்ளதாக அறிவித்தது தவறான செய்தியா? அறிவித்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு 12 ஆயிரம் வீடுகள் 9 ஆயிரம் வீடுகளாகக் குறைந்து, அதற்கும் இன்னும் சில மாதங்களில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் பணிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றால் முதல்வர் 110வது விதியின் கீழ் செய்கின்ற அறிவிப்புகளின் கதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறதல்லவா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK chief Karunanidhi has replied strongly to CM Jayalalitha's slam against DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X