For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எத்தனை கொலைகள், எத்தனை கொள்ளைகள்... கருணாநிதி வெளியிட்ட லிஸ்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சியில் இதுவரை நடந்த கொலைகள், கொள்ளைகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதி பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பட்டியலில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நடந்த கொலைகள், கொள்ளைச் சம்பவங்களை அவர் தொகுத்துக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

கொலைகள் 3231 - கொள்ளைகள் 1170

கொலைகள் 3231 - கொள்ளைகள் 1170

ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எவ்வாறு இருந்தது என்பதற்கு ஆதாரபூர்வ மாக விளக்கம் கூற வேண்டுமேயானால், இந்த இரண்டரை ஆண்டுகளில் ஏடுகளிலே வெளிவந்த கொலைகள் மாத்திரம் 3,231 -கொள்ளைகள் 1,170 - வழிப்பறி மோசடிகள் 691 - செயின் பறிப்புகள் 652! இதுதான் ஜெயலலிதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு நன்கு பராமரிக்கப்படுவதற்கான இலட்சணம்!

எத்தனை கொலைகள்? எத்தனை கொள்ளைகள்?

எத்தனை கொலைகள்? எத்தனை கொள்ளைகள்?

கடந்த வாரம் சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகளின் மாநாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மூன்று நாட்கள் நடைபெற்றிருக்கிறது. மூன்று நாட்களிலும் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றியிருக்கிறார். முதல் நாளன்று அவருடைய தொடக்கவுரையில், பத்திரிகைகள் எல்லாம் பெரிதாக வெளியிட்டிருப்பது சட்டம், ஒழுங்கு பற்றித்தான்!

பெருமையும், திருப்தியும்

பெருமையும், திருப்தியும்

"சட்டம், ஒழுங்கைப் பொறுத்தவரை இங்குள்ளோர் அனைவரும் பெருமையும், திருப்தியும் கொள்ளும் நிலையில்தான் உள்ளது. வகுப்புவாத, தீவிரவாத, மத அடிப்படை யிலான மோதல்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. காவல் துறைக்கும், மாவட்ட நிர்வாகத் திற்கும் எந்தத் தடைகளையும் விதிக்காமல் சுதந்திரமாகச் செயல்பட நான் அனுமதி அளித்ததால் மட்டுமே இது சாத்தியமானது"" என்று முதல்வர் பேசியிருக்கிறார்.

கடந்த ஆண்டும்

கடந்த ஆண்டும்

கடந்த ஆண்டும் இதே டிசம்பர் மாதத்தில் 17ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடைபெற்று, அப்போது முதல்வர் பேசிய போதும் என்ன பேசினார் என்றால், "எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டிலே சட்டம், ஒழுங்கு, அமைதி இவைகள் எல்லாம் சிறப்பாக இருக்கின்றன. தீவிரவாதம் தமிழகத்தில் இல்லை; மதவாதம் தலையெடுக்க அனுமதிக்கப்படவில்லை"" என்று குறிப்பிட்டார்.

அதற்கு மறு நாளே...

அதற்கு மறு நாளே...

அதற்கு மறுநாளே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நான், அதிமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு, அது வரை நடைபெற்ற கொலைகள் எத்தனை, கொள்ளைகள் எத்தனை, செயின் பறிப்புகள் எத்தனை, வழிப்பறி மோசடிகள் எத்தனை என்றெல்லாம் புள்ளி விபரங்களோடு பட்டியலிட்டுக் காட்டினேன். சட்டம், ஒழுங்கு இந்த ஆட்சியில் எவ்வாறு இருக்கிறது என்பதற்கு ஒருசில சம்பவங்களை நினைவுபடுத்தினாலே புரிந்துகொள்ள முடியுமென்று நம்புகிறேன்.

பயந்து ஓடிய சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ

பயந்து ஓடிய சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ

வாடிப்பட்டி அருகே உருட்டுக்கட்டையால் தாக்க வந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் தலைமையிலான கும்பலுக்குப் பயந்து சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. கருப்பையா, ஓட்டல் அறைக்குள் வைத்துப் பூட்டியதால் உயிர் தப்பினார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி. அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கான அடையாளங்களில் இதுவும் ஒன்றோ?

2 மாதங்களுக்கு முன்பு

2 மாதங்களுக்கு முன்பு

இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயசந்திரன், நாகமுத்து ஆகியோர், கொலை வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில், "கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை. அதில் படிந்திருந்த ரத்தக் கறையை டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி, அந்த அரிவாள்தான் கொலையாளிகள் பயன்படுத்தினர் என்பதை நிரூபிக்கவில்லை. விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. அந்தக் குறைபாடுகளைக் களைய போலீசாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதைப் போலீசார் சரியாகப் பயன்படுத்தவில்லை. இந்த வழக்கில் போலீசாரின் பல்வேறு குறைபாடுகள், தவறுகள், திறமையின்மை வெளிப்பட்டுள்ளது. இதற்குமேல் விசாரணை அமைப்பை எப்படி விமர்சனம் செய்யவேண்டும் எனத் தெரியவில்லை.

போலீஸ் விசாரணை வீணாகிப் போனது

போலீஸ் விசாரணை வீணாகிப் போனது

கல்நெஞ்சம் படைத்த கொலையாளிகள்; நான்கு பேரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். போலீசாரின் விசாரணை முழுவதும் வீணாகிவிட்டது. ஐகோர்ட் வைத்திருந்த நம்பிக்கையை போலீசார் தகர்த்துவிட்டனர். தகுந்த ஆதாரங்கள் சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபிக்க போலீசார் தவறி விட்டனர். போலீசார் பொறுப்பு, கடமைகளில் தவறியதை உணர வேண்டும். விசாரணையில் போலீசார் அலட்சியம் காட்டுவது, நீதி, நியாயம் தோற்கக் காரணமாக அமைகிறது. இந்த வழக்கில் நீதி தோற்றதை கனத்த இதயத்துடன் சொல்கிறோம்" என்று காவல் துறை பற்றி நீதிபதிகள் விமர்சித்திருக்கிறார்கள்.

இதை விட..

இதை விட..

ஜெயலலிதா ஆட்சியில் அவர் பொறுப்பில் உள்ள காவல் துறையினரை இதைவிட வேறு யாரால் இப்படிப் பாராட்ட முடியும்? கடந்த நவம்பர் முதல் வாரத்தில், திருச்சி, தஞ்சை, நாகையில் மட்டும் ஒரே நாளில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது. அதுவும் இந்த ஆட்சியின் சட்டம், ஒழுங்குக்கு ஒரு பாராட்டுத்தான்?

மதுரை நெல்பேட்டையில்

மதுரை நெல்பேட்டையில்

மதுரை நெல்பேட்டை, போலீஸ் - அவுட்போஸ்ட்டுக்கு எதிரே, ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், கடந்த நவம்பர் 20ஆம் தேதி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அக்பர் அலியின் காரில் மர்ம நபர்கள் வைத்த குண்டு வெடித்தது. நல்லவேளையாக கார் அப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் யாரும் சாகவில்லை. இதுவும் சட்டம், ஒழுங்கு சீராக உள்ளது என்பதற்கான அடையாளம்தான்!

குண்டர்கள் 1061..

குண்டர்கள் 1061..

புழல் சிறையிலே மொத்தம் 1,250 கைதிகளை வைக்க முடியும். ஆனால் அங்கே இப்போது இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 2,381. அதிலே குண்டர்கள் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருப்போர் 1,061 பேர். தமிழகத்திலே சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கு இதுவும் ஓர் உதாரணம் அல்லவா?

வகுப்புவாத மோதல்களே இல்லையா...

வகுப்புவாத மோதல்களே இல்லையா...

வகுப்புவாத மோதல்கள் இல்லாத மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்கிறார் ஜெயலலிதா. ஆனால் இவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் 2011 செப்டம்பர் 11ஆம் தேதியன்று பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவமே நடைபெற்று 6 பேர் கொல்லப்பட்டார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் 23-12-2011 அன்றே உத்தரவிட்டும் கூட, சி.பி.ஐ. இதனை விசாரிக்கவில்லை.

ராமதாஸ் - திருமாவளவன்

ராமதாஸ் - திருமாவளவன்

மதுரை மாவட்டத்திற்குள் டாக்டர் ராமதாஸ் அவர் களை நுழையக்கூடாது என்று அந்த மாவட்ட ஆட்சியர் ஓர் உத்தரவு பிறப்பித்தார்; கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் அந்த மாவட்டத்திற்குள் அவரை நுழையக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்; விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல். திருமாவள வனை விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; அதுபோலவே தர்மபுரி மாவட்டத்திற்கே 144 தடை என்றெல்லாம் இந்த ஆட்சியில் உத்தரவிடப்பட்டு, ஜனநாயக நடவடிக்கை கள் நசுக்கப்பட்டதும், சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கான அடையாளங்கள்தானா?

பாலியல் பலாத்காரங்கள்

பாலியல் பலாத்காரங்கள்

கடந்த சில மாதங்களில் நடைபெற்ற பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட பெண்களின் பட்டியலைப் பார்த்தால்; வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்து ஆண்டியப்பன் கிராமத்தில் ஒன்பது வயது சிறுமி காயத்ரி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை; சிவகிரியில் நந்தினி என்ற பெண் கற்பழிக்கப்பட்டுக் கொலை; சைதாப்பேட்டையில் விஜயா என்ற பெண்ணின் சடலம்; தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 13 வயது சிறுமி, பள்ளி மாணவி புனிதா கற்பழிக் கப்பட்டு கொலை; நாகை மாவட்டத்தில் 11 வயது தலித் இனத்தைச் சேர்ந்த சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து கற்பழிப்பு; விருத்தாசலத்தில் மணிமுத்தாறு நதிக்கரையில் சுகந்தி என்கிற இளம் பெண் கற்பழிப்பு; சிதம்பரம் அருகில் மஞ்சக்குழி கிராமத்தில், சந்தியா என்கிற இளம்பெண் கற்பழிக்கப்பட்டு 3வது மாடியிலிருந்து வீதியிலே எறியப்பட்டாள்; தர்மபுரியில் அரூர் தாலுக்காவில் தராவலசை கிராமத்தில் மேனகா என்கிற இளம்பெண் திருமணமானவர், கற்பழிக்கப்பட்டு படுகொலை;

விடியற்காலையில் வீடு புகுந்து பலாத்காரம்

விடியற்காலையில் வீடு புகுந்து பலாத்காரம்

தூத்துக்குடி மாநகரில், மாதாநகர் 2வது தெருவில் மாரியம்மாள் என்கிற இளம்பெண் கணவனைப் பிரிந்து 3 குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார், விடியற்காலையில் வீடு புகுந்து மாரியம்மாள் கற்பழிப்பு; விழுப்புரம் வானூர் ருக்மணிபுரம் பள்ளி மாணவி கல்கி என்பவள் கற்பழிக்கப்பட்டு சவுக்குத்தோப்பில் பிணமாகத் தொங்கவிடப்பட்டாள்; உடுமலையில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்; சிறுமி அவமானம் தாங்க முடியாமல் தீக்குளித்தாள்; நாமக்கல்லில் 18 வயது இளம்பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நான்கு பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு; வேலூர் மாவட்டம், ஆர்க்காடு அருகில் திமிரி என்கிற ஊரில் அபிநயா என்கிற 17 வயது பெண், அச்சுறுத்தல், மிரட்டல் காரணமாக, கற்பைக் காப்பாற்றிக் கொள்ள க்குளித்து தற்கொலை; சென்னை, பொழிச்சலூரில் பிரேமலதா என்ற பெண் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு காட்டில் பிணமாக வீசப் பட்டுக் கிடந்தாள்; திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் திருமணமான மீனா என்கிற இளம்பெண் தன் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டு கற்பழிப்பு;

ஆடு மேய்த்த சிறுமி பலாத்காரம்

ஆடு மேய்த்த சிறுமி பலாத்காரம்

ஒரத்தநாடு, புதூரில் 6ஆம் வகுப்பு படித்துவந்த 11 வயது சிறுமி, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது கற்பழிப்பு; ராணிப்பேட்டை அருகில் சுடுகாட்டில் சிறுமி கொலை செய்யப்பட்டு, எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார்; என்று தொடர்ந்து கட்டுக்கடங்காமல், பெண்கள் மீதான கொடுமைகள் டைபெற்று வருகின்றன. இதுதான் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் பெருமைமிகு தமிழ் மாநிலமா?

போலீஸ் பக்ருதீன்

போலீஸ் பக்ருதீன்

காவல் துறை எந்த அளவிற்குச் செயல்படுகிறது என்பதற்கு "போலீஸ் பக்ருதீன்" கைதை பெருமையாக முதல்வர் பேசியிருக்கிறார். ஆனால் பக்ருதீன் யாரைக் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் என்று காவல் துறை சொல்கிறதோ, அதே காவல் துறை கடந்த சில மாதங்களுக்கு முன் அந்தக் குறிப்பிட்ட நபரை கொலை செய்தது வேறு சிலர் என்று கூறி, அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துச் சிறையிலே தள்ளியதே, அதுவும் ஜெயலலிதா தலைமையிலே உள்ள காவல் துறைதானே? இந்த முரண்பாட்டுக்கு யார் பாராட்டுரை வழங்குவது?

அவதூறு வழக்குகள்

அவதூறு வழக்குகள்

அந்தத் தவறுக்காக காவல் துறையிலே பணியாற்றும் கீழ்மட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறார்களே; இதில் அந்தத் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் அல்லவா விளக்கம் தரவேண்டும்? பாராட்டு மட்டும் முதல் அமைச்சருக்கு; தண்டனை என்றால் கீழே உள்ள அதிகாரிகளுக்கா? மேலும் முதல்வர், காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் சமூக விரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முழு சுதந்திரம் அளிக்கப் பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் சமூக விரோத சக்திகளை அல்ல, தங்களுக்குப் பிடிக்காதவர்களையும், பிடிக்காத அரசியல் கட்சி களின் தலைவர்களையும்தான் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குகிறார்கள். அதற்கான அடையாளம் தான் கணக்கற்ற "அவதூறு வழக்குகள்"!

பொய் மெய்யாகி விடுமா

பொய் மெய்யாகி விடுமா

இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியாகவோ, முறையாகவோ பராமரிக்கப்படவில்லை என்பதற்கான சம்பவங்களை எழுத வேண்டுமேயானால் நேரமும் போதாது, பத்திரிகையில் இடமும் இருக்காது. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா, அது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு என்றாலும் - ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதில் அளிப்பதாக இருந்தாலும் தனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தமிழகம் பெருமைமிகு மாநிலமாகத் திகழ்கிறது என்று சொல்லிக் கொள்வதும், அதைத் தமிழக நாளேடுகள் எல்லாம் கொட்டை எழுத்துக் களில் வெளியிடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. ஒரே பொய்யை, திரும்பத் திரும்பச் சொல்லி விளம்பரப்படுத்திக் கொள்வதாலேயே, அந்தப் பொய் மெய்யாகிவிடுமா?

ஆதாரப்பூர்வமாக சொல்வதானால்..

ஆதாரப்பூர்வமாக சொல்வதானால்..

ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எவ்வாறு இருந்தது என்பதற்கு ஆதாரபூர்வ மாக விளக்கம் கூற வேண்டுமேயானால், இந்த இரண்டரை ஆண்டுகளில் ஏடுகளிலே வெளிவந்த கொலைகள் மாத்திரம் 3,231 -கொள்ளைகள் 1,170 - வழிப்பறி மோசடிகள் 691 - செயின் பறிப்புகள் 652! இதுதான் ஜெயலலிதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு நன்கு பராமரிக்கப்படுவதற்கான இலட்சணம் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்

English summary
DMK chief Karunanidhi has released a statement detailing the murders, rapes and thefts in TN
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X