For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து ட்வீட் போட்ட அழகிரி மகன் தயாநிதி.. கடுப்பில் கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

Karunanidhi upset over Dayanidhi Azhagiri's tweet
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கோடு ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் மு.க. அழகிரியின் மகன் தயாநிதி எழுதியுள்ள கருத்தால் திமுக தலைவர் கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இதுவரையில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட 4 ஊழல் வழக்குகள் இருக்கிறது.

இந்த நிலையில் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் "சொத்துக் குவிப்பு வழக்கோ அல்லது ஸ்பெக்ட்ரம் வழக்கோ தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் அது முடிந்துவிடுகிறது.. யாரும் உதவி செய்ய முடியாது.. நீதித்துறையை மதிக்க வேண்டும் என்று தயாநிதி அழகிரி பதிவு செய்துள்ளார்.

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Disproportionate Assets Case or 2G case. If a verdict is been given there ENDS the case. No one can help it. Respect the judiciary!</p>— Dhaya Alagiri (@dhayaalagiri) <a href="https://twitter.com/dhayaalagiri/status/516879628506390528">September 30, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இது திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி திமுக தலைவர் கருணாநிதியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட கருணாநிதி அழகிரி மகன் மீது கடும் கோபத்தில் இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
DMK leader Karunanidhi upset over his grand son Dayanidhi Azhagiri's tweet on 2G case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X