For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைஷ்ணவி கல்யாணத்துக்கு ரூ. 25 லட்சம் கொடுத்த மதுரை ஆதீனம்.. போலீஸில் புகார்

Google Oneindia Tamil News

Madurai Aadheenam and Vaishnavi
மதுரை: வைஷ்ணவியின் குடும்பத்தினர்தான் தற்போது மதுரை ஆதீனத்தை தஙக்ளது கட்டுப்பாட்டுக்குள் வைத்து, சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர். வைஷ்ணவி கல்யாணத்துக்காக ரூ. 25 லட்சம் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார் ஆதீனம். மேலும் ஆதீனத்தின் பல கோடி சொத்துக்களுக்குக் கணக்கே இல்லை. அந்த வகையில் ரூ. 750 கோடி வரை மோசடி நடந்திருப்பதாக தெரிகிறது என்று இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் மதுரை காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகார் மனுவில், மதுரை ஆதீன மடம் 1500 ஆண்டுகள் பழமையானது. கடந்த 1.3.1980ம் ஆண்டு முதல் ஆதீனமாக அருணகிரிநாக்தர் என்ற மதுரை ஆதீனம் இன்று வரை 33 ஆண்டுகள் இம்மடத்திற்கு வரவேண்டிய வருமானத்தை சுமார் 750 கோடி வரை அபகரித்துள்ளார்.

மடத்தில் தற்போது ஆதீனத்திற்கு உதவியாளராக இருக்கும் வைஷ்ணவியும் இதற்கு உடந்தையாக உள்ளார். மதுரை ஆதீன மடத்தை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அந்த கடைகளின் மூலம் மாதம் 10 லட்சம் வரை கிடைக்கிறது.

இதுவரை 33 ஆண்டுகளில் 750 கோடி வரை வருமானத்தை பெற்றுள்ளார் ஆதீனம். அவருடைய உதவியாளர் வைஷ்ணவி, வைஷ்ணவி தாயார் கமலம், சகோதரி கஸ்தூரி, கணவர் வேதமூர்த்தி அனைவரும் சேர்ந்துகொண்டு ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரித்து வருகின்றனர்.

மடத்தின் வருமானத்தில் இருந்து 25 லட்சம் வரை வைஷ்ணவி திருமணத்திற்கு ஆதீனம் செலவு செய்துள்ளார். ஆதீனம் மடம் சொத்துக்களை வாங்கவோ விற்கவோ கூடாது என்ற நிலையில் தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், அதையும் மீறி 55 லட்சம் ரூபாய்க்கு மதுரை அருணகிரி நாதர் என்ற பெயரில் ஆதீனம் சொத்து வாங்கியுள்ளார்.

ஏற்கனவே அருணகிரிநாதரை மடாதிபதி பதவியில் இருந்து நீக்கக்கோரி தமிழக அறநிலையத்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தேன். அந்த மனு விசாரணை நடைபெறும் நிலையில், அவருடைய பதவியை நீக்க வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Hindu Makkal katchi has charged that Vaishanai and her family are looting the assets of Madurai Aadheenam and has given a complaint against Aadheenam in Madurai police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X