For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செவ்வாயை நோக்கி நகரும் மங்கள்யான் - பாதி தூரத்தைக் கடந்தது

Google Oneindia Tamil News

சென்னை: செவ்வாய் கிரகத்திற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் தன்னுடைய சுற்றுப் பாதையில் பாதி தூரத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப் பாதையின் பாதி தூரத்தை இன்று காலை சரியாக 9.50க்கு கடந்தது.

மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவின் சத்தீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் ஏவப்பட்டது.

மங்கள்யான் விண்கலம்:

மங்கள்யான் விண்கலம்:

தற்போது அது 337.5 மில்லியன் கிலோமீட்டர்களை கடந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மங்கள்யான் விண்கலம் வரும் செப்டம்பர் 24, 2014 அன்று செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரக ஆய்வு:

செவ்வாய் கிரக ஆய்வு:

மங்கள்யானின் நோக்கம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ ஏற்ற சாத்தியக்கூறு உள்ளதா என்று சோதித்து அனுப்பும்.

சீனாவை விட பெஸ்ட்:

சீனாவை விட பெஸ்ட்:

சீனாவின் செவ்வாய் கிரக பயணத்தை விட மங்கள்யான் முற்றிலும் சிறந்ததாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தோல்வி அடைந்த விண்கலங்கள்:

தோல்வி அடைந்த விண்கலங்கள்:

15 மாதங்களில் 500 விஞ்ஞானிகளால் மங்கள்யான் உருவாக்கப்பட்டது. மேலும் இதுவரை அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில் 27 தோல்வியடைந்துள்ளன குறிப்பிடத்தக்கது.

முறியடிக்குமா மங்கள்யான்:

முறியடிக்குமா மங்கள்யான்:

மேலும் இதுவரையில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் யுரோப்பா விண்வெளி மையங்கள் மட்டுமே வெற்றிகரமாக செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது.

பயணத்தில் பாதி கடந்த மங்கள்யான்:

பயணத்தில் பாதி கடந்த மங்கள்யான்:

கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி செவ்வாய் நோக்கி மங்கள்யான் தனது பயணத்தை துவங்கியது. இந்த நீண்ட பயணத்தில் மங்கள்யான் விண்கலம் பாதி தூரத்தை கடந்துவிட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

செப்டம்பரில் செவ்வாயை அடையும்:

செப்டம்பரில் செவ்வாயை அடையும்:

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி, மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Mangalyaan is in a step ahead to mars. It has crossed the half way to reach the Mars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X