For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது! விருதுநகரில் வைகோ - ஈரோட்டில் கணேசமூர்த்தி போட்டி!!

By Mathi
|

சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. விருதுநகரில் மதிமுக பொதுச்செயலர் வைகோ போட்டியிடுகிறார்.

லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து 7 தொகுதிகளில் மதிமுக போட்டியிடுகிறது. சென்னையில் இன்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்குடன் நடைபெற்ற இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை வைகோ வெளியிட்டார்.

MDMK releases list of candidates- Vaiko contest from Virudhunagar!!

மதிமுக வேட்பாளர்கள் விவரம்:

விருதுநகர்- வைகோவிருதுநகர்- வைகோ

2. காஞ்சிபுரம்- மல்லை சத்யா

ஈரோடு- கணேசமூர்த்திஈரோடு- கணேசமூர்த்தி

தென்காசி- சதன் திருமலைக்குமார்தென்காசி- சதன் திருமலைக்குமார்

5. தேனி- அழகு சுந்தரம்

தூத்துக்குடி- வழக்கறிஞர் ஜோயல்தூத்துக்குடி- வழக்கறிஞர் ஜோயல்

7. ஸ்ரீபெரும்புதூர் - மாசிலாமணி

பெரம்பலூரில் பாரிவேந்தர்..

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனரும் புதிய தலைமுறை ஊடக நிறுவனருமான பாரிவேந்தர் என்ற பச்சமுத்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
BJP ally MDMK today released its Candidates for Lok Sabha elections. MDMK General Secretary Vaiko to contest from Virudhunagar Constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X